பெரிய நடிகர் ஆனபோதும் பழசை மறக்காத விஜயகாந்த்… அவரே சொல்லிட்டாரே..!

Published on: March 18, 2025
---Advertisement---

கேப்டன், புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைக்கும்போது பல அவமானங்களை சந்தித்தவர். தன்னை அவமானப்படுத்தினவர்களின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற வைராக்கியத்தில் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு சினிமாவிலும் சாதித்துக் காட்டினார்.

அவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டம் அடைந்ததே இல்லை. அப்படியே நஷ்டம் அடைந்தாலும் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து அவர்களின் கஷ்டத்தைப் போக்கினார். தன்னோட படம் சரியாக ஓடவில்லை என்றால் அதற்கு இயக்குனர் மட்டும் காரணமல்ல. தான் தான் காரணம் என்பதை பெரிய மனதுடன் ஒப்புக் கொள்வார் விஜயகாந்த்.

தன் முகத்துக்காகத் தானே தயாரிப்பாளர் படம் எடுக்க முன்வருகிறார். இயக்குனர் இயக்குகிறார். படம் சரியில்லை என்றால் மட்டும் நான் அதற்கு பொறுப்பல்ல என்று சொல்வது எந்தவகையில் நியாயம் என்று பேசுபவர் தான் அந்த புரட்சிக்கலைஞர்.

தன்னுடன் பணிபுரியும் சக நடிக, நடிகைகள், உதவியாளர்கள் என யாருக்காவது ஒரு கஷ்டம்னா முதல் ஆளாக வந்து செய்யக்கூடியவர் விஜயகாந்த் தான். அதே சமயத்தில் அவர் எப்போதுமே பழசை மறக்காதவர். இன்று பலரும் பெரிய ஆளாகிவிட்டால் தான் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர்.

vijayakanth rasi studio

vijayakanth rasi studio

ஆனால் விஜயகாந்த் அப்படி அல்ல. அவர் தான் சினிமாவுக்கு நுழைய காரணமாக இருந்த போட்டோ ஸ்டூடியோவைக் கூட மறக்காமல் இருந்துள்ளார். பெரிய நடிகர் ஆனதும் அவர் என்ன செய்தார் என்பதை அந்த ஸ்டூடியோ கடை முதலாளியே இப்படி தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

விஜயகாந்த் சினிமா ஆசையில் மதுரையில் பல ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துள்ளார். ஆனால், எதிலும் அவருக்கு திருப்தி இல்லை. பின்னர் தான் என் கடைக்கு வந்தார். நான் எடுத்துக் கொடுத்த போட்டோ அவருக்கு ரொம்ப புடிச்சது. 32 போட்டோவை 41 நாள் எடுத்தோம். அதை எடுத்துக் கொண்டு போய் தான் சினிமா வாய்ப்பு தேடினாரு.

பெரிய நடிகராக ஆன பிறகும் என்னை ஞாபகம் வைத்து என் பேரைச் சொன்னாரு. அதில் இருந்து விஜயகாந்தையே படம் எடுத்தவர்னு நிறைய பேர் வந்து போட்டோ எடுக்க ஆரம்பிச்சாங்க என்கிறார் மதுரை ராசி ஸ்டூடியோவுக்குச் சொந்தக்காரரான ஆசை தம்பி

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment