மாநாட்டுக்கு விஜய் போட்ட கண்டிஷன்கள்... கட்சிக்கு வருமா அந்த ஆபத்து?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:15  )

அரசியல், சினிமா என இரட்டைக்குதிரையில் இப்போது விஜய் சவாரி செய்து வருகிறார். சினிமா உலகில் தனது கடைசி படம் என தளபதி 69 ஐ அறிவித்துள்ளார். எச்.வினோத் இயக்கி வருகிறார். படத்தில் அரசியல் வாடை வீசும் என்கிறார்கள். ஆனால் விஜய் சினிமா வேறு, அரசியல் வேறு என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஜயின் முதல் கட்சி மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றி அடையுமா எப்படி என்று பிரபல வலைப்பேச்சாளர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

விஜய் மாநாடு நிச்சயமா வெற்றி மாநாடு தான். யார் ஒருவர் பிரியாணியும், குவாட்டரும் கொடுக்காம கூட்டத்தைக் கூட்ட முடியுதோ அது நிச்சயமா வெற்றி மாநாடு தான். இந்த மாநாட்டில் விஜய் பேசுற விஷயம் என்னங்கறது தான் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஜய் இந்த மாநாட்டில் பேசுபவர்களை அழைத்து எந்தக் கட்சியையும் டார்கெட் பண்ணிப் பேசக்கூடாது. ஆளும்கட்சிக்கு எதிராகப் பேசக்கூடாது. யார் மனதையும் புண்படுத்திப் பேசக்கூடாதுன்னு சொன்னாராம். நாங்க என்ன பண்ணப்போறோம்? எங்களுடைய விஷயம் என்னன்னு மட்டும் பேசுங்க. இதைத் தாண்டிப் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறாராம்.

அது என்ன காரணம்னு தெரியல. அப்படி ஒரு அரசியலைப் பண்ண முடியுமான்னு தெரியல. ரஜினியும் ஆன்மிக அரசியல். யாருக்கும் எதிரானது அல்லன்னு தான் ஆரம்பிச்சாரு. ஆனா அவரு ஒதுங்கிப் போயிட்டாரு. ஆனா இவரும் கிட்டத்தட்ட அதே பாலிசிக்கு வர்றது ஏன்னு தெரியல.

இவங்க இடித்துக் கூற வேண்டியதும் நிறைய இருக்கு. விமர்சிக்கப்பட வேண்டியதும், தட்டிக் கேட்கவேண்டியதும் நிறைய இருக்கு. இதை எதையுமே கண்டுக்காம கடந்து போயிட்டாங்கன்னா இதை ஒரு கட்சியாவே யாரும் அங்கீகரிக்க மாட்டாங்க. அந்த ஆபத்து நிறையவே இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story