தல தளபதியை வச்சு பண்ணலானு யோசிக்கும் போது வந்தான் ஒரு ஹீரோ! விஷ்ணுவர்தன் சொன்ன சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் விஷ்ணுவர்தன். பல படங்களை இவர் இயக்கியிருந்தாலும் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் மூலம் இவருடைய மார்க்கெட் பெரிய லெவலுக்கு சென்றது. 2003 ஆம் ஆண்டில் குறும்பு என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் விஷ்ணுவர்தன்.
அந்த படத்தை தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும் , பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இப்படி தொடர்ந்து தமிழில் இரு வெற்றி படங்களை கொடுத்து வந்த விஷ்ணு வரதனுக்கு பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. 2007 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து பில்லா திரைப்படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமீதா, ரகுமான், பிரபு போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர் .படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்துக்கும் இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கிலும் படங்களை இயக்கினார்.
பில்லா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து மீண்டும் ஆரம்பம் என்ற திரைப்படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன். ஆரம்பம் திரைப்படமும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது. இப்போது ஹிந்தியிலும் பிஸியாக இருந்து வருகிறார் விஷ்ணுவர்தன்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளியை வைத்து நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். இந்த படத்தை சமீபத்தில் நயன்தாரா தான் ப்ரோமோட் செய்திருந்தார்.
இதில் ஆகாஷ் முரளி எப்படி ஹீரோவாக வந்தார் என்பதை பற்றி விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில் கூறுகிறார். மும்பையில் ஒரு படத்தில் பிசியாக இருந்த விஷ்ணுவர்தனை பார்க்க ஆகாஷ் முரளியும் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகளும் சென்றிருந்தார்களாம்.
அந்த சமயத்தில் விஷ்ணுவர்தனிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்க இதை அஜித்தை வைத்து பண்ணலாமா அல்லது விஜயை வைத்து பண்ணலாமா என அவர் நினைத்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில்தான் ஆகாஷ் முரளியும் பிரிட்டோவின் மகளும் வந்திருக்கிறார்கள்.
அப்போது பிரிட்டோவின் மகள்' ஒரு படம் எங்கள் நிறுவனத்திற்காக பண்ண வேண்டும்' என கேட்க 'சரி யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம்' என விஷ்ணுவர்தன் கேட்க ,அருகில் இருந்த ஆகாஷ் முரளியை கூறியிருக்கிறார் பிரிட்டோவின் மகள்.
ஆகாஷ் முரளியை பார்த்ததுமே ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் அவரிடம் இருந்தது. சினிமாவைப் பற்றிய எல்லா புத்தகங்களையும் தெள்ளத் தெளிவாக படித்து வைத்திருக்கிறார். சினிமாவைப் பற்றிய அறிவு அவரிடம் நிறையவே இருக்கிறது. எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுதான் சினிமாவிற்கு வந்திருக்கிறார் ஆகாஷ் முரளி.
அதனால் அவரிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வருவார் ஆகாஷ் முரளி என அந்த பேட்டியில் விஷ்ணுவர்தன் கூறியிருக்கிறார்.