நீங்களாச்சும் காப்பாத்துங்கப்பா… தனுஷின் ராயன் டிரைலர் எப்போ தெரியுமா? ரிலீஸ் அப்டேட்..

Published on: July 17, 2024
---Advertisement---

சமீப காலங்களாகவே கோலிவுட் திரைப்படம் பெரிய அளவில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 2024 இரண்டாம் பகுதியில் எக்கச்சக்கமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அந்த வரிசையில் இந்தியன் முதல் படமாக திரையரங்குக்கு வந்தது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் அப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தனுஷின் ராயன் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படம் இந்த மாதம் 26ந் தேதி திரையரங்குக்கு வர இருக்கிறது.

இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

இப்படத்தின் கடைசிகட்ட பணிகள் முடிந்து படத்தின் சிங்கிள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை(16 ஜூலை) திரைக்கு வர இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ரிலீஸாகி இருக்கிறது.

ஏற்கனவே ஜனவரியில் கேப்டன் மில்லர் ரிலீசான நிலையில் அப்படம் சுமாரான விமர்சனங்கள் மட்டுமே பெற்றது. இதனால் தனுஷ் ரசிகர்களும் ராயன் ரிலீஸுக்கு பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். வடசென்னை படத்துக்கு பின்னர் தனுஷின் இப்படமும் ஏ சான்றிதழ் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.