விலகிய கமல்… உள்ளே வரும் மாஸ் ஹீரோ… களைக்கட்ட போகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8…

by ராம் சுதன் |

பிக்பாஸ் தமிழின் எட்டாவது சீசன் நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் கமல்ஹாசன் விலகி இருக்கும் விஷயம் ரசிகர்களை கவலையாக்கி இருக்கும் நிலையில், அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்து இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் அறிமுகமான புதிதில் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த முக்கிய பாப்புலாரிட்டியே நடிகர் கமல்ஹாசன் தான். அவர் கொடுக்கும் முதல் புரோமோவில் இருந்து கடைசியாக வீட்டை லைட் ஆஃப் செய்துவிட்டு வருவது வரை ரசிகர்களுக்கு பெரிய அளவில் சந்தோஷத்தினை கொடுக்கும்.

இருந்தும் கடைசி ரெண்டு சீசன்களாகவே கமல்ஹாசனின் ஒரு சார்பு தன்மை ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அதிலும் பிக்பாஸ் சீசன் 6ல் விக்ரமனுக்கு சப்போர்ட் செய்தபோது கூட அசீமின் கோவத்தை பிடிக்காத ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே இருந்தனர். இதனால் அப்போது கூட கமல் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் கடைசி சீசன் கமல்ஹாசனின் பெயரையே கெடுக்கும் அளவுக்கு விமர்சனம் குவிந்தது. ஒருகட்டத்தில் பெண் போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்து கமலை கலாய்த்தனர். மேடையில் ஏறி விஜய் டிவி பிரபலங்களே கமலின் பெயரை கெடுத்தனர். இதனால் கமல் தரப்பு பெரிய அளவில் அப்செட்டானதாகவே கூறப்படுகிறது.

இதை தொடர்ந்தே இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார். அடுத்தது தொகுத்து வழங்க சிலம்பரசன் அல்லது ரம்யா கிருஷ்ணன் வரலாம் என முதலில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் சிம்புவும் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் கண்டிப்பாக வருவது சந்தேகம் தான் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் ஆங்கராக விஜய் சேதுபதியை கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏனெனில், விஜய் சேதுபதியும் கமலை போல எதையும் யோசிக்காமல் பேசுபவர். இதனால், கமல் இடத்தினை விஜய் சேதுபதியும் நிரப்ப வாய்ப்பு அதிகம் என்றே நம்பப்படுகிறது. இன்னும் சில தினங்களில் புரோமோவில் அந்த கேள்விக்கும் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story