ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காத வேட்டையன்... அதுக்கு இவ்ளோ காரணங்களா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:29  )

சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் வேட்டையன். த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசை அமைத்த படம். ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்த போதும் அவரது ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஏன் தெரியுமா? பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி எவ்ளோ காரணங்களை சொல்றாருன்னு பாருங்க.

ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் காக்கா கழுகு கதைக்குப் பிறகு ரஜினி, விஜய் ரசிகர்கள் எதிரெதிர் துருவங்களாகி விட்டனர். ஒருவரை ஒருவர் வசைபாடுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக வேட்டையன் படம் ஓடும் திரையரங்குகளில் கூட்டம் இல்லை. புக்கிங் இல்லை என நிரூபிக்குற மாதிரி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சோஷியல் மீடியாக்களில் போடுகின்றனர்.

விஜய் ரசிகர்கள் சமீபத்தில் நடித்த கோட் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் ஒன்று திரண்டு அந்தப் படத்தைத் தோல்விப்படம் போல காட்டினார்கள். வேட்டையன் படம் ரஜினி ரசிகர்களையும் பெரிதும் ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை. ஜெயிலர் மாதிரி மசாலா படம் இல்லை. ஆனால் நல்ல கருத்தைக் கொண்டது.

ஜெயிலர் படத்தில் வன்முறை திணிக்கப்பட்ட காட்சிகள் இருந்தன. அதை ரசிகர்கள் ரசித்தார்கள். ஆனால் வேட்டையன் வன்முறைக்கு எதிரான படம். அதனால் அதிகமாக வன்முறைக் காட்சிகள் இல்லை. அதற்கு எதிரான கருத்துக்களைச் சொன்னது அந்தப் படம். அதனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று தான் நான் நினைக்கிறேன்.

பொதுவான ரசிகர்களுக்குப் பிடிக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது தான் கேள்வி. காவல்துறை என்கவுண்டரின் போது சில கட்டுக்கதைகளைப் புனைவார்கள். அது மட்டும் அல்ல. கல்வியை வியாபாரம் ஆக்கக்கூடாது என்பதையும் படத்தில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ரஜினி ரசிகர்களுக்கு நீட் தேர்வு பற்றி கவலை இல்லை. என்கவுண்டர் பற்றி அக்கறை இல்லை. கல்வி வியாபாரம், கல்வி கொள்ளை பற்றி எல்லாம் கவலை இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு என்கவுண்டருக்கு எதிரான படம் எப்படி பிடிக்கும்?

நீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற வேட்டையன் எப்படி பிடிக்கும்? மக்கள் உரிமைக்காகப் போராடும் போது அவர்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கிற ஒரு நபர் தான் ரஜினி. ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொண்டாலும் அவர் ஒரு வலதுசாரி. ரஜினி ரசிகர்களுக்கான வழக்கமான மசாலா இல்லாத போது அவர்களுக்கு படம் பிடிக்காது.

அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை வேட்டையன் பூர்த்தி செய்யலை என்பதாலும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஒரு கையால் 10 பேரை அடிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த வயதிலும் ரஜினி சமூகத்திற்கு நல்ல கருத்தைச் சொல்லும் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story