அவ்வளவு சீக்கிரம் தலைய ஆட்டாத சூர்யா! ஆர்.ஜே பாலாஜிக்கு ஓகே சொல்ல காரணம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:15  )

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தை நவம்பர் மாதல் ரிலீஸுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக புரடக்‌ஷனில் இருந்த கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸாக இருக்கின்றது. கங்குவா படம் பல மொழிகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கின்றது.

கங்குவா படம் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக சூர்யவின் 45வது படம் பற்றிய தகவல் வெளியாகியது.

சூர்யாவின் 45வது படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்குவதாக நம்பகத்தகுந்த வட்டாரம் தெரிவித்தது. ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி விஜயை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்காத பட்சத்தில் அடுத்து சூர்யாவுடன் இணைகிறார் ஆர்ஜே பாலாஜி.

இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறுகையில் சூர்யாவிடம் கதை சொல்லி ஏகப்பட்ட இயக்குனர்கள் வரிசையாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர் ஜே பாலாஜி இரண்டு மணி நேரம் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டு முடித்ததும் சூர்யா நவம்பர் மாதம் இறுதியில் இருந்து படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாராம் சூர்யா.

அதுவும் வாடிவாசல் படத்திற்கு முன்பு இந்தப் படத்தை கொண்டுவரவேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா. அப்படி என்ன கதை சொல்லியிருப்பார் ஆர்ஜே பாலாஜி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் சூர்யாவிடம் கதை சொல்லி முடித்ததும் அடுத்த இரண்டு நாள்களில் ஏஆர் ரஹ்மானிடமும் கதை சொல்லி அவருடைய கால்ஷீட்டையும் வாங்கிவிட்டாராம் பாலாஜி.

இந்தக் கதை சூர்யாவுக்கு உடனே பிடித்து விட்டாலும் அப்படி என்ன கதை சொல்லியிருப்பார் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்தார். மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விஷேசம்ங்க போன்ற படங்களை இயக்கியவரும் பாலாஜிதான்.

Next Story