இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது!.. யோகி பாபுவை அவமானப்படுத்திய இயக்குனர்..

by ராம் சுதன் |

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. கதாநாயகன் வாய்ப்பு மட்டுமல்ல. இயக்குனர், காமெடி நடிகர், ஹீரோவின் நண்பன் என எந்த வேடம் என்றாலும் பல வருடங்கள் போராட வேண்டும். ஏதேனும் ஒரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ இரக்கப்பட்டு வாய்ப்புகொடுப்பார்கள். இதுதான் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களின் நிலைமை.

இப்போது நடித்து கொண்டிருக்கும் எல்லா நடிகர்களின் பின்னாலும் பல வருடங்களாக போராட்டங்கள் இருக்கிறது. அப்படி வந்த ஒருவர்தான் யோகி பாபு. துவக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக மூலையில் நின்று கொண்டிருப்பார்.

ஒருநாளைக்கு 50 ரூபாய் கொடுப்பார்கள். இப்போது ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

அதற்கு காரணம் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என யாரும் ஃபீல்டில் இல்லை. வடிவேலு ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். விவேக் மறைந்துவிட்டார். சூரியும், சந்தானமும் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கு யோகிபாபு காமெடி பஞ்சத்தை போக்கி வருகிறார். அவரின் காமெடி சிரிப்பு வருகிறதோ இல்லையோ அவரை விட்டால் இப்போதைக்கு வேறு யாருமில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த யோகி பாபு துவக்கத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது பலரிடமும் அவமானப்பட்டதாக கூறியிருக்கிறார். ‘ஒருமுறை எனது நண்பர் ஒருவர் அவருக்கு தெரிந்த இயக்குனர் இயக்கும் படத்தில் வாய்ப்பு இருப்பதாக சொல்லி என்னை போய் பார்க்க சொன்னார்.

நான் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு அந்த இயக்குனரின் வீட்டுக்கு போனேன். போகும் வழியில் மழை என்பதால் முழுதாக நனைந்துவிட்டேன். கதவை தாழிட்டு உள்ளே பேசிக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியாக என்னை பார்த்து ‘என்னப்பா?’ என்றார். ‘சார் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன்’ என சொன்னேன். ஆல்பத்தை வாங்கி அதையும் என் முகத்தையும் மாறி மாறி பார்த்தார்.

எனக்கு மிகவும் சந்தோஷம். எப்படியும் 10 நாட்கள் வேலை வரும் என நினைத்தேன். ஏனெனில் அது மலைப்பகுதிகளில் எடுக்கும் ஒரு படம். கண்டிப்பாக என் முகம் அதற்கு செட் ஆகும் என நினைத்தேன். ‘இந்த மூஞ்சிலாம் இந்த படத்துக்கு யூஸ் ஆகாது. நீ இந்த படத்துல இல்ல’ என சொல்லி ஆல்பத்தை திருப்பி கொடுத்துவிட்டார்’ என சிரித்து கொண்டே சொன்னார் யோகி பாபு.

Next Story