ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? ‘மெய்யழகன்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

சூர்யா ஜோதிகா தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசான திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமி கார்த்தி ஆகியோர் நடிக்க கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண் , தேவதர்ஷினி போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் அதே ஒரு எதிர்பார்ப்புடன் மெய்யழகன் திரைப்படத்தையும் வரவேற்க ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

அவர்கள் நினைத்ததை போலவே மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்று சொல்லலாம். பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையே மெய்யழகன் திரைப்படம் பெற்றது. இந்த படம் மட்டுமல்லாமல் அதே நாளில் தேவாரா ஹிட்லர் போன்ற வேறு சில படங்களும் நேற்று வெளியான நிலையில் மெய்யழகன் திரைப்படத்திற்கு ஒரு கடுமையான போட்டி இருந்தது என்றே சொல்லலாம்.

இருந்தாலும் தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் மெய்யழகன் திரைப்படத்தின் வசூல் கணிசமாகவே இருந்து வருகிறது. அதன்படி மெய்யழகன் படத்தின் முதல் நாளில் ஐந்து கோடி வரை வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது .இது ஒரு வலுவான தொடக்கமே என்றும் சினிமாவில் கூறப்பட்டு வருகிறது.

அது மட்டும் அல்லாமல் இது ஒரு நம்பிக்கை கூறிய தொடக்கமாகவே சொல்லப்படுகிறது. இன்னும் வார இறுதியில் இதனுடைய வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .சனி ஞாயிறு ஆகியவை விடுமுறை நாள் என்பதால் முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் மெய்யழகன் படத்தின் கலெக்ஷன் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெய்யழகன் திரைப்படம் 96 படத்தை போலவே ஒரு நாளில் சொல்லப்படக்கூடிய படமாகவே அமைந்திருக்கிறது. ஒரு அழகான கிராமப்புற மனிதராக கார்த்தி இந்த படத்தில் நடித்திருக்கிறார். மனித உணர்ச்சிகளை எந்த அளவு கையாள முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

மற்ற படங்களைப் போல ஆக்சன் பாடல் நடனம் என எதுவுமே இல்லாத நிலையிலும் ஒரு பீல் குட் மூவியாகவே மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது .ஸ்ரீ திவ்யாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தெலுங்கிலும் இந்த படம் சத்தியம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it