Connect with us

Cinema News

சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா செய்யும் சூப்பர் விஷயம்!.. ஊரு கண்ணே பட்டுடும்! .. என்னவொரு வெறித்தனம்!..

கணவர் சூர்யாவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து அவர் செய்யும் வளைத்து கடினமான உடற்பயிற்சிகளையும் தானும் செய்து அசத்தும் வீடியோ காட்சியை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்திலிருந்து சூர்யா சிக்ஸ் பேக் வைப்பது என மாஸ் காட்டி வருகிறார். கங்குவார் படத்திற்காகவும் தனது உடம்பை நல்லா பில்டப் பண்ணி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தின் கதை இதுதான்… ரசிகனுக்காக ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்..

மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா தீவிரமான உடற்பயிற்சிகளை செய்து செம பிட்டாக உள்ளார். குழந்தைகளுக்காக மும்பைக்கு செல்கிறேன் என சிவகுமாரிடம் இருந்து சூர்யாவை தனியாக பிரித்து மும்பையில் புதிதாக வீடு வாங்க வைத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா என்றும் சூர்யாவையும் பாலிவுட்டில் அவர்தான் அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

சமீபத்தில் ஜோதிகா நடித்து ஹிந்தியில் வெளியான சைத்தான் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கூட அவ்வளவு வசூல் ஈட்டாத நிலையில் சூர்யாவை முந்தி ஜோதிகா பாலிவுட்டில் பட்டைய கிளப்பி வருகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை தனது வாரிசாக அறிவிக்க ஆசைப்பட்ட நடிகர்!.. ஆனால் நடக்காமல் போன சோகம்!..

கணவர் சூர்யாவுக்கு சரிசமமாக கடினமான உடற்பயிற்சிகளை நடிகை ஜோதிகா செய்யும் வீடியோவை பார்த்தால் ஜிம்முக்கு போகாதவர்களுக்கும் உடனடியாக ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடம்பை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படும் ஏதாவது ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஜோதிகா மற்றும் சூர்யா இப்படி இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ணு படப்போகுது திருஷ்டி சுத்தி போடுங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஜோதிகா இணைந்ததில் இருந்தே அடிக்கடி ஏகப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். நடிகர் சூர்யா கங்குவா, கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். வாடிவாசல், புறநானூறு படங்கள் டிராப் ஆகி விட்டதா என்கிற கேள்விகளுக்கு சரியாக அவர் இன்னும் விடை அளிக்கவில்லை.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C5QsmxmSz1x/

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top