விஜய் ஆண்டனிக்கு அடுத்த ஹிட் ரெடி!.. அதிரவைக்கும் ஹிட்லர் ஸ்னீக்பீக் வீடியோ!...
Hitler movie: திரையுலகில் சவுண்ட் என்ஜினியராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. ஒருகட்டத்தில் நடிகராகவும் மாறினார். இவர் முதலில் அறிமுகமான ‘நான்’ படம் ஒரு திரில்லர் படம்தான். அதுதான் விஜய் ஆண்டனிக்கு செட் ஆகியது. அடுத்து நடித்த சலீம் படமும் ஒரு திரில்லர் படம்தான்.
தொடர் ஹிட் என்பதால் கமர்ஷியல் படம் பக்கம் வந்தார். அப்படி வெளியான பிச்சைக்காரன் வசூலில் சக்கைப்போடு போட்டது. இதனால் அவருக்கு ஆந்திராவிலும் ரசிகர்கள் உண்டானார்கள். அதன்பின் சில படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை. ஒருகட்டத்தில் அவரே இயக்குனராகவும் மாறினார்.
அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான பிச்சைக்காரன் 2 படம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிக்கும் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனியே தயாரித்தும் வருகிறார். இயக்கம், தயாரிப்பு, இசை, நடிப்பு என எல்லாவாற்றையும் அவரே செய்து வருகிறார். ஒருகட்டத்தில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக மாறினார் விஜய் ஆண்டனி.
அதில், ஹிட்லர் படமும் ஒன்று. செண்டிமெண்ட் பார்க்காமல் தனது படங்களுக்கு நெகட்டிவாகவே தலைப்புகளை வைத்து வருகிறார். இந்த படத்தை தன சேகரன் என்பவர் இயக்கியிருக்கிறார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஹிட்லர் 2024 வருடத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் 3வது திரைப்படம் ஆகும்.
இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை சமீபத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டார். இந்நிலையில், இப்படத்தின் 4 நிமிட காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோ என்கிற பெயரில் படக்குழு வெளியிட்டிருக்கிறது. மலைப்பகுதிகளில் வேலை செய்துவிட்டு பெண்கள் இரவில் ஆற்றைக்கடந்து செல்லும் போது வெள்ளம் அதிகமாகி அவர்கள் அதில் சிக்கிக்கொள்வது போன்ற் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது.
அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார். அனேகமாக அவருக்கு பிறக்கும் குழந்தைதான் விஜய் ஆண்டனியாக இருப்பார் என கணிக்கப்படுகிறது. இதுவும் ஒரு திரில்லர் படமாகவே உருவாகியிருக்கிறது. வருகிற 27ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.