More
Categories: Cinema News latest news

அப்பாடா அவங்களுக்கு கோப்ரா பிடிக்கலையாம்.. அப்போ விக்ரம் படம் பெரிய ஹிட்… இது சினிமா சீக்ரெட்..

சியான் விக்ரம் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தை ஜமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட்  வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலர் கொடுத்த எதிர்பார்ப்பு பல ஊர்களில் முன்பதிவு தொடங்கி கணிசமான வேகத்தில் நடந்து வருகிறது .

இதையும் படியுங்களேன் – ஆண்ட்ரியா நிர்வாண காட்சி எடுத்தேன்னு யார் சொன்னது.?! அந்தர் பல்டி அடித்த சர்ச்சை இயக்குனர்.!

இந்நிலையில், திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவுகிறதாம். படம் கோடம்பாக்கத்தினருக்கு பிடிக்கவில்லையாம். ட்ரைலருக்கு முன்பு இருந்த கோப்ரா வரவேற்பு இப்போது இல்லை என பேசப்படுகிறதாம்.

இதையும் படியுங்களேன் – தமிழ் சினிமாவின் ‘கனவு’ நாயகன் சூர்யா தான்… லோகேஷ், வெற்றிமாறன் முதல் சிவா வரை… முழு விவரம் இதோ…

இதன் உண்மை நிலவரம் என்னவென்று விசாரித்தால் இது ஒரு வியாபார யுக்தியாம். படம் நன்றாக எதிர்பார்ப்பு உள்ள படமாக இருந்தாலும், விநியோகிஸ்த்தார்கள் குறைந்த விலைக்கு வாங்க இது போல படம் நன்றாக இல்லை கிளப்பிவிடுவார்களாம். அப்படி சினிமாகாரர்களுக்கு பிடிக்காமல் மக்களுக்கு பிடித்து ஓடிய படங்கள் தமிழ் சினிமாவில் பல உள்ளன என்கிறது சினிமா ரிப்போர்ட்.

Published by
Manikandan

Recent Posts