இனிமே குக் வித் கோமாளி மொக்கை ஆகிடுமோ?.. இப்படி பண்ணிட்டாரே வெங்கடேஷ் பட்!..

by Akhilan |
இனிமே குக் வித் கோமாளி மொக்கை ஆகிடுமோ?.. இப்படி பண்ணிட்டாரே வெங்கடேஷ் பட்!..
X

Cook With Comali: ரியாலிட்டி ஷோக்களில் புதுவிதமாக வெளியாகி டாப் ஹிட் அடித்தது தான் குக் வித் கோமாளி. இந்த வருடம் இதன் ஐந்தாவது சீசன் வெளியாக இருக்கும் நிலையில் அதன் முக்கிய நடுவரான வெங்கடேஷ் பட் அதிரடியாக ஒருவிஷயத்தினை அறிவித்து இருக்கிறார்.

சமையல் நிகழ்ச்சியில் இதுவரை காணாத புதுமை. ஒரு போட்டியாளருடன் சமையலே தெரியாத கோமாளி இணைந்து ஒரு டிஸை சமைப்பது தான் போட்டி. இப்படி ஒரு சீசன் தொடங்கிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வாங்கியது. ஆனால் இரண்டாவ்து சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படி முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும் வெற்றி பெற்றனர்.

இதையும் படிங்க: பாடி சேஃப் பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ரம்யா பாண்டியன்!…

போட்டியாளர்கள் கோமாளி ஹிட் அடித்த அதே வேலையில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தான். இந்நிலையில் தான் வர இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அந்த அறிவிப்பில், என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி5 குறித்து நிறைய யூகங்கள் வெளியாகி இருக்கிறது. அதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். வர இருக்கும் சீசனில் நான் இல்லை.

நான் நானாக இருந்தேன். 24 வருடங்களாக இருந்த சேனலில் இருந்து புதிய வாய்ப்புகளுக்காக வெளியேற அனுமதித்த சேனலுக்கு நன்றி. இது கஷ்டமான முடிவு தான். விரைவில் இன்னொரு புதிய இடத்தில் கண்டிப்பாக உங்களை சந்திப்பேன். அதுவரை ஷோ குறித்து யோசித்துக்கொண்டு இருங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். வெங்கடேஷ் பட்டுக்கு பதில் மேட் செஃப் கௌஷிக் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் பாக்கியா… கடுப்பில் கோபி… சந்தேகத்தில் ராதிகா… மாட்டிவிடுங்கப்பா…

Next Story