Connect with us

latest news

பட வாய்ப்புகள் போச்சு!.. அதிரடியா மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த கோமாளிகள்.. அட அவருமா?..

குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் விஜய் டிவியில் தொடங்க உள்ள நிலையில், கோமாளிகளாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகின்றனர் என்கிற அதிரடி அறிவிப்பு புதிய புரோமோவாக வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக செயல்பட உள்ளனர்.  இந்த முறையும் சூப்பரான போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டில் வந்து விட்டு வெளியே வாய்ப்பே கிடைக்காத விஜய் டிவி புராடக்ட்களையும் போட்டியாளராக உள்ளே கொண்டு வருவார்கள்.

இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..

இந்நிலையில், ஹீரோவாக நடிக்கிறேன் என்று சென்ற புகழ் மீண்டும் கோமாளியாக இந்த சீசனில் வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து திடீரென விலகிய மணிமேகலை வெளியே சரியான வேலை கிடைக்காத நிலையில், மீண்டும் சீசன் 5க்கு வந்திருக்கிறார். குரேஷி, சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக வருகின்றனர். ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல தொகுத்து வழங்க காத்திருக்கிறார்.

விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல மாஸ் புரமோவை வெளியிட்டுள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ் வரும் போது கூட பிரைவேட் ஜெட்டில் வருவது போன்ற புரமோவை தான் வெளியிட்டு விஜய் டிவி மாஸ் காட்டியது.

இதையும் படிங்க: ‘லியோ’வில் செஞ்ச தப்பு! ‘கோட்’ படத்தில் நடக்கவே நடக்காது.. கண்கொத்தி பாம்பாக சுத்தும் ஏஜிஎஸ்

விஜய் டிவி புகழ் மீண்டும் வந்த நிலையில், அவர் விமானத்தில் வராமல் ஓட்டை சைக்கிளில் வருவது போலவும், விஜய் டிவி ராமர் இந்த சீசனில் குக்காக வருகிறேன் என சொல்ல, குக்கா வந்தா ஒரு சீசன், கோமாளியா வந்தா பல சீசன்கள் என சொல்ல, கோமாளியாவே மாறிடுறேன் என ராமர் சொல்லி விட்டு அவரது சைக்கிளில் ஏற பார்க்கிறார். ஆனால், அவரை விட்டு விட்டு விஜய் டிவி புகழ் கிளம்புவது போல புரமோவை வடிவமைத்துள்ளனர்.

சினிமா வாய்ப்பு தேடி வெளியே கிளம்பியவர்கள் எல்லாம் மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் வந்திருக்காங்களே என்ன ஆச்சு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in latest news

To Top