கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்! அச்சச்சோ இவருக்கு போய் இப்படியா?

Published on: July 21, 2023
cook
---Advertisement---

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில்  ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்து டி.ஆர்.பி.யில் முதல் இடத்திலேயே இருந்து கொண்டு வருகின்றது. ஏராளமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். பிரபலங்கள் முதல் அனைத்து தரப்பு நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

கோமாளியாக விஜய் டிவிக்கே என்று சில பிராண்ட் நடிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக குரேஷி, சக்தி, சுனிதா, புகழ், பாலா , பரத் போன்றவர்கள் கோமாளிகளாக வந்து நிகழ்ச்சியின் வெற்றிக்கே உறுதுணையாக இருந்து வருகின்றனர். எந்த அளவுக்கு இறங்கி நகைச்சுவை பண்ண வேண்டுமோ தரை லோக்கலாக இறங்கி காமெடியில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

cook1
cook1

இதன் மூலம் ஏராளமான பேருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்து நடித்துக் கொண்டும் வருகின்றனர். புகழ் சமீபகாலமாக அனைத்து படங்களிலும் தோன்றக்கூடிய நடிகராகவே மாறிப் போனார். அதே போல தங்கதுரை, பாலா ஆகியோருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஜாக்கெட் போடாம எப்படி நடிக்கிறது? இது பழசு – ஜாக்கெட்டே போட மாட்டேன்! இது புதுசு – கைலாச ராணியாக மாறிய ரஞ்சிதா

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு கோமாளியாக இருப்பவர் சக்தி. ஒல்லியான உடல், நல்ல உயரம். இதுதான் அவருடைய அடையாளம். கோமாளியாக வந்து இவரும் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் நேற்று செண்ட்ரலில் இருந்து ஒரு காரில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக பேருந்தில் மோதி விட்டாராம்.

இந்த விபத்தில் சக்திக்கு தலையில் லேசான அடி மற்றும் தொண்டை பகுதியிலும் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்து விட்டார். ஆனால் கார் கண்ணாடி உடைந்து கொஞ்சம் பழுதடைந்திருக்கின்றது. பச்சையப்பா கல்லூரி அருகில் நடந்த இந்த விபத்தால் அந்த கல்லூரி மாணவர்கள் சிலர்தான் சக்தியை தூக்கி முதலுதவி செய்தார்களாம்.

cook2
sakthi

மேலும் அந்த காரோடயே ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார் சக்தி. அதாவது அந்த நேரத்தில் என்னை நேரில் பார்த்தவர்கள் மிகவும் பயந்து விட்டார்கள் என்றும் எனக்கு எதுவும் ஆகவில்லை என்பதை சொல்வதற்காகவே இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : எதிர்பார்ப்பை எகிறவைத்து வெளிவராமல் போன திரைப்படங்கள்!.. சிக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.