எஸ்டிஆருக்கு பத்து தல!.. கூல் சுரேஷுக்கு சொட்டை தல!.. இர்பான் அந்த தலையில என்ன பண்றாரு பாருங்க!..

நடிகர் கூல் சுரேஷ் தனது தலைக்கு விக் வைத்து ஒட்டிக் கொள்ளும் வீடியோவை இர்பான் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் கூல் சுரேஷ் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தியேட்டர்களுக்கு வாராவாரம் சென்று புதிய படங்களை புரமோஷன் செய்து வந்த கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சமீபத்தில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூல் சுரேஷுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: இத்தனை நாளா இப்படி இல்லையே!.. இந்த சனம் ஷெட்டியை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க!.. தூக்கம் காலி!..

சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, சமீபத்தில் வெளியான இங்க நான் தான் கிங்கு உள்ளிட்ட பல படங்களில் தனது நண்பன் கூல் சுரேஷுக்கு சந்தானமும் பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் சேலம் ஆர் ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வன் கால் சுரேஷுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். மேலும், அவர் தயாரிப்பில் கூல் சுரேஷ் ஹீரோவாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தனது வழுக்கை தலையை மாற்றி ஒட்டிக்கோ கட்டிக்கோ ஸ்டைலில் விக் வைக்கும் வீடியோவை இர்பான் யூடியூப் சேனலில் கூல் சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நாகேஷை சங்கடப்பட வைத்த இயக்குனர்… ஆனா அவருக்குப் பாருங்க… என்ன ஒரு பெருந்தன்மை..!

அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கூல் சுரேஷ் மற்றும் இர்பான் அடிக்கும் காமெடிகளும் சிம்பு நடிச்சது பத்து தல கூல் சுரேஷுக்கு சொட்டை தலைன்னு இனிமேல் யாரும் கிண்டல் செய்ய முடியாது என்றும் அதற்குத்தான் இப்படியொரு செம ஏற்பாடு என தனது முடிக்கு ட்ரீட்மெண்ட் செய்யும் வீடியோவையே கூல் சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் போல ரிஸ்க் இல்லாமல் இந்த ரெடிமேட் செட்டப் நல்லா இருக்கேப்பா என ரசிகர்கள் பலரும் தங்களுக்கும் இப்படியொரு விஷயத்தை செய்யணும் என கமெண்ட் போட்டு வருகின்றனர். கடைசி வரைக்கும் அந்த மன்னிப்பு வீடியோ மட்டும் வராது போல என நெட்டிசன்கள் இர்பான் எஸ்கேப் ஆக எப்படி எல்லாம் வீடியோ போடுறாரு பாருங்க என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சுஹாசினியை சீண்டிய ரவுடிகள்! ரியல் ஹீரோவாக மாறிய மோகன்.. லவ்வர் பாய்க்குள் இப்படி ஒரு ஹீரோயிசமா?

 

Related Articles

Next Story