நயன்தாரா விஷயத்தில் தனுஷுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு!.. இனிமே சரவெடிதான்!..

by சிவா |
nayanthara
X

nayanthara

Dhanush: நடிகர் தனுஷின் வொண்ட்ர் பார் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் நானும் ரவுடிதான். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2015ம் வருடம் வெளியானது. இந்த படம் உருவான போது சொன்ன பட்ஜெட்டை விட் அதிக செலவு இழுத்து வைத்தார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவை உஷார் செய்து படப்பிடிப்பில் அவருடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததே படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே செல்வதற்கு காரணம் என தெரிந்துகொண்ட தனுஷ் கோபமடைந்து இனிமேல் இந்த படத்திற்கு நான் செலவு செய்ய மாட்டேன் என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: விஜய் பண்றது கருவாட்டு சாம்பாருனா!.. நீங்க பண்றதுக்கு பேர் என்ன?!.. தளபதிக்காக சீமானிடம் பொங்கிய பிரபலம்!..

தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு இப்படம் வாழ்க்கையை கொடுக்கும் என நம்பிய நயன்தாரா தனது சொந்த பணத்தை கொடுத்து இப்படத்தை முடிக்க உதவி செய்தார். அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றபோதும் தனுஷின் கோபம் குறையவில்லை. அதன்பின் அவர் நயன் - விக்கி இருவருடன் பேசுவதையே விட்டுவிட்டார்.

ஒருபக்கம், நயன் - விக்கி திருமண விழா தொடர்பான வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருந்தது. இதற்கு 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷிடம் என்.ஓ.சி கேட்டு 2 வருடங்கள் காத்திருந்தோம். அவர் கொடுக்கவில்லை.

nayanthara

nayanthara

தனுஷ் அவரின் அப்பா, அண்ணன் மூலம் வளர்ந்தவர். அவர் ஒரு சைக்கோ என்றெல்லாம் திட்டி தீர்த்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. ஆனால், நயனின் திருமண ஆவண படத்தில் நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுஷுக்கு நீதிபதி அனுமதி கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: நீங்க வேற லெவல்!.. அது என்னால முடியாது!.. பார்த்திபனுடன் நடிக்க மறுத்த ரஜினி!..

Next Story