Cinema News
கடைசி வரை நடக்காமல் போன டேனியல் பாலாஜியின் நீண்டகால ஆசை… நடந்து இருந்தா நல்லா இருக்குமே!
Daniel Balaji: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பயத்தினை தரும் வில்லனாக இருந்தவர் டேனியல் பாலாஜி. ஆனால் அவர் திடீரென நெஞ்சுவலியால் நேற்று இரவு உயிரிழந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தினை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
அவருக்காக பல முன்னணி இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டேனியல் பாலாஜி குறித்து நிறைய தகவல்கள் தொடர்ச்சியாக ரிலீஸாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவுக்கு வந்த முக்கிய விஷயமே நடக்காமல் போனதாக கூறப்படுகிறது. சென்னையின் திரைப்பட கல்லூரியில் படித்து கோலிவுட்டுக்குள் வந்தவர் டேனியல் பாலாஜி.
இதையும் படிங்க: ‘இனிமேல்’ நீ அவ்ளோதான் ராசா.. கடுப்பில் வெளியானதுதானா ரஜினி 171 போஸ்டர்? பொட்டிப் பாம்பாக சுருண்ட லோகி
மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தும் அது நடக்காமல் போனது. பின்னர் சித்தி சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன், காக்க காக்க படத்தில் பாசிட்டிவ் ரோல் கிடைத்தது. ஆனால் சரியான ரீச் கிடைக்கவே இல்லை. அப்படி அவரின் நடிப்பில் ரிலீஸான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அமுதன் என்ற அவர் வில்லன் கேரக்டர் பலருக்கு பயத்தினையே கொடுத்தது. இதனை தொடர்ந்து நமக்கு வில்லன் தான் சரியென தெரிந்து கொண்ட டேனியல் பாலாஜி தொடர்ச்சியாக வில்லனாகவே நடித்தார். கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதற்கு பின்னர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. இந்நிலையில் தான் டேனியல் பாலாஜிக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: வடிவேலு பேசிய பஞ்சு! ரஜினி பேசுற அளவுக்கு famous ஆச்சு.. என்ன டையலாக் தெரியுமா?
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் பலரும் அதிர்ச்சியாகி இருக்கும் நிலையில், டேனியல் பாலாஜியின் நீண்டநாள் ஆசை நடக்கவே இல்லையாம். கோலிவுட்டுக்கு டேனியல் பாலாஜி வந்தது டைரக்டராக வேண்டும் என்ற ஆசையில் தானாம். அதற்கு திரைப்பட கல்லூரியில் படித்து தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு தான் வந்தாராம். ஆனால் கடைசி வரை அவருக்கு இயக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லையாம். இதுவும் பலரை கலங்க வைத்து இருக்கிறது.