Connect with us

Entertainment News

தேவதர்ஷினியுடன் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட 96 பட நடிகை!.. அம்மாவும் பொண்ணும் செம க்யூட்!..

தளபதி விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ”நா ரெடி தான் வரவா” பாட்டுக்கு அம்மாவும் மகளும் போட்ட குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் நடிகை தேவதர்ஷினி சமீப காலமாக இந்தி படங்களில் அதிலும் சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் வெப்சிரீஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா படங்களில் காமெடி நடிகையாக மாறிய தேவதர்ஷினி சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா?.. செம கோபத்தில் இருந்த லிங்குசாமி.. என்ன ஆச்சு?

மேலும், இந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்தில் நாயகி அதா சர்மாவின் அம்மாவாக நடித்திருந்தார். தேவதர்ஷினியின் கணவர் சேத்தன் விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தில் மோசமான வில்லனாக நடித்து கதிகலங்க செய்திருந்தார்.

இந்த நட்சத்திர தம்பதியினரின் மூத்த மகளான நியதி விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 படத்தில் அம்மா தேவதர்ஷினியின் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வருகிறார்.

இதையும் படிங்க: சரிகமப டைட்டில் வின்னர்!.. 10 லட்சம் ரூபாயை தட்டித் தூக்கிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா?..

இந்நிலையில், தற்போது தனது அம்மா தேவதர்ஷினியுடன் நடிகர் விஜய்யின் லியோ படலுக்கு இடுப்புத் தெரிய கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C09PEV6S-a1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

google news
Continue Reading

More in Entertainment News

To Top