Cinema News
உன்னால நான் கெட்டேன்!.. அவனால நீ கெட்ட!.. என்னடா தனுஷ், சியான் விக்ரமுக்கு வந்த சோதனை!..
ஜூன் மாதம் கமல்ஹாசனின் இந்தியன் 2 வரப்போகிறது, தனுஷின் ராயன், கல்கி படம் வரப்போகிறது என அறிவிப்புகள் வெளியானதும் ஜூலை மாதத்துக்கு தங்கலான் படத்தை தள்ளிப் போட ஸ்டூடியோ க்ரீன் நினைத்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தியன் 2 மற்றும் தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்கள் ஜூன் மாதமே வெளியாகவில்லை.
விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாவதை முன்னிட்டு தனுஷின் ராயன் படம் அடுத்த மாதம் தள்ளிப் போயிருக்கிறது. தனுஷ் படத்தால் தங்கலான் தள்ளிப் போன நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தால் ராயன் படம் தள்ளிப் போனதாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் ஒடைஞ்சு போன கவின் இமேஜ்!.. நெல்சன் கழுத்துல தொங்குது பெரிய கத்தி!.. என்ன பண்ண போறாரோ?..
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு பெரியளவில் புரமோஷனை எல்லாம் விஜய் சேதுபதி செய்து வருகிறார். துபாயில் சாதாரணமாக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் புரமோஷனையே புர்ஜ் கலிஃபாவில் சில கோடி செலவில் செய்து மாஸ் காட்டியுள்ளார்.
சூரிக்கு கருடன் படம் ஓடியது போல விஜய் சேதுபதிக்கு மகாராஜா ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் திரைக்கதை பயங்கரமாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பலரும் பேசி வருவதால் விஜய் சேதுபதி படத்துடன் மோத யாருமே தயாராக இல்லை என்கின்றனர்.
இதையும் படிங்க: திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..
தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் விஜய்சேதுபதிக்கு இந்த படமாவது கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் நல்லா இருந்தாலும் வசூல் ரீதியாக விஜய் சேதுபதி படங்கள் ஓடாமல் இருந்த நிலையில், மகாராஜா படத்தில் வெட்டுக் குத்து என படம் இருந்தால் வசூல் வேட்டை நடத்துமா? என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குரங்கு பொம்மை பட இயக்குனர் இயக்கத்தில் உருவாகி உள்ள மாகாராஜா படத்தில் மம்தா மோகன் தாஸ், அனுராஜ் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் ராயன் படம் மற்றும் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படங்களின் ரிலீஸ் தேதியை கூட இன்னமும் வெளியிடாமல் உள்ளனர். முதலில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற போட்டி தான் காரணம் என்கின்றனர்.
இதையும் படிங்க: திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..