Cinema News
ப்ளீஸ் எனக்காக வெயிட் பண்ணுங்க!.. இயக்குனரிடம் கெஞ்சு கேட்ட தனுஷ்.. வட போச்சே!…
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என டேக் ஆப் ஆனார். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு பயிற்சி எடுத்தவர். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார்.
கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் வேடங்களிலும், கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த தனுஷ் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என எல்லா இடத்துக்கும் போனார். நடிப்புக்காக சில தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: மணிரத்தினத்தை கடுப்பேற்றிய தல… நேருக்கு நேர்படத்தில் அஜித் to சூர்யா… அப்ப இதுதான் நடந்துச்சா…?
இந்த வருட துவக்கத்தில் அவரின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதன்பின் அவரின் 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன் என பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது தெலுங்கில் உருவாகி வரும் குபேரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான், சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து டேக் ஆப் ஆகவிருந்த புறநானூறு படம் டிராப் ஆனது. 50களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சூர்யா கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா அதற்கு மறுக்க சூர்யா வெளியேறிவிட்டார்.
அந்த கதையில் நடிக்க தனுஷ் ஆசைப்பட்டார். சுதா கொங்கராவுக்கும் தனுஷை வைத்து அப்படத்தை எடுக்க ஆசைதான். இன்னும் சொல்லப்போனால் சூர்யாவை விட தனுஷ் அந்த கதைக்கு பொறுத்தமாக இருப்பார். ஆனால் ‘எனக்காக 2 வருடங்கள் காத்திருங்கள். கண்டிப்பாக இந்த படத்தில் நான் நடிக்கிறேன்’ என தனுஷ் சொல்ல சுதா அதை ஏற்கவில்லை.
சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தை எடுக்க சுதா திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தான் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு போய்விட்டதே என இன்னும் அப்செட்டில் இருக்கிறாராம் தனுஷ்.