More
Categories: latest news tamil movie reviews

கேப் விடாமல் சுடும் கேப்டன் மில்லர்!.. படம் தேறுமா? தேறாதா?.. முழு விமர்சனம் இதோ!

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த முறையாவது முழுவதும் ரசிக்கும் படி ஒரு படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்த்தால், எனக்கு என்ன வருதோ அதைத்தான் எடுப்பேன். முடிஞ்சா பாரு இல்லாட்டி போ என்கிற ரீதியிலே ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

ராஜா குடும்பம் சொல்லிட்டு 4 பேரை மட்டுமே காட்டுறாங்க மத்தவங்க அனைவரும் அந்த ஊரில் அடிமைகள் போலவே காட்டப்பட்டுள்ளனர். எந்த ஊருக்கு ஜெயப்பிரகாஷ் ராஜா என்பதே புரியாத புதிராக உள்ளது. இந்த காமெடி ஒரு பக்கம் என்றால், தனுஷ் ஆங்கிலேயர்களின் மிலிட்ரியில் போய் சேர்ந்து விட்டு அங்கேயே ஒரு ஜெனரலை போட்டுத் தள்ளி விட்டு அசால்ட்டாக தப்பித்து வந்து விடுவார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஏதோ மிஸ் ஆகுது!.. தனுஷோட பெஸ்ட் இது இல்ல!.. ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா ‘கேப்டன் மில்லர்?..’..

அண்ணன் சுதந்திரத்துக்காக போராட இயக்கம் ஒன்றில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால், அவர் கடைசி காட்சியிலும் தனியாளாகவே ஒரு சின்னக் கூட்டத்தை கூட்டிக் கொண்டு வருவது எல்லாம் காமெடியின் உச்சம். பொட்டல் காட்டில் நாலு குடிசை செட் போட்டு 1930 என்று சொன்னால் நீங்க நம்பித்தான் ஆக வேண்டும் என ஒரு கலைப் படைப்பு. பிரியங்கா மோகனை முதல் சீனில் காட்டும் போதே படத்தில் அவர் ஒட்டவில்லை. கடைசி வரை அந்த கதைக்கு தள்ளியே இருக்கும் இவர் கிளைமேக்ஸில் கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார்.

தனுஷ் தான் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்று உடலை ஏற்றி, இறக்கி வித விதமான துப்பாக்கிகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு எத்தனை ஆங்கிலேயர்கள் வந்தாலும் தனியாளாக சுட்டு வீழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

இதையும் படிங்க: என்னம்மா ரோகினி அப்படியே பல்டி அடிச்சிட்ட!.. இந்த ரவியும், ஸ்ருதியும் யாரு பக்கம் டா! மாத்தி மாத்தி பேசுறீங்க…

இந்த படத்தில் ஆங்கிலேயர்களிடம் பீரங்கிகள் இல்லை போலத் தெரிகிறது. எத்தனையோ போர் படைகளையும் யானை படைகளையும் கொண்ட ராஜாக்களையே துவம்சம் செய்த  ஆங்கிலேயர்களை கேப்டன் மில்லர் கொன்று குவிப்பது பார்க்க நல்லாத்தான் இருந்தாலும், இடையே வரும் அந்த ஜெயிலர் படக் கதை எல்லாம் படத்தை கெடுத்து விடுகிறது.

கேப்டன் மில்லர் – கர்ஜனை இல்லை!

ரேட்டிங்: 3/5

 

 

Published by
Saranya M

Recent Posts