உண்மையிலேயே கர்ணனாகவே மாறிய தனுஷ்! இரவு பகல் பார்க்காமல் அண்ணனுக்காக துணிந்து இறங்கிய சம்பவம்

Published on: October 16, 2023
dhanush
---Advertisement---

Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். மக்கள் மத்தியில் ஒரு தன்னிகரற்ற நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். ஒட்டுமொத்த சினிமாவுமே விஜய், அஜித், ரஜினி  இவர்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் பல திரைப்படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் தன்னுடைய 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதுமட்டுமில்லாமல் பிற மொழித் திரைப்படங்களிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாண ஜோடியாகிடுவாங்க… முத்து – மீனா வாழ்க்கைக்கு தான் ஆப்பு போல..!

ஹாலிவுட் வரை சென்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றவராக தனுஷ் இருக்கிறார்.ஆரம்ப காலங்களில் அப்படி இப்படி இருந்தாலும் இப்போதுதான் தனுஷ் சினிமாவிற்காக தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்.

சவாலான பல கேரக்டர்களை துணிச்சலோடு ஏற்று அதில் எந்தளவு சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டுமோ கொடுத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறார். அசுரன் படத்தில் அவர் ஏற்றிருந்த கேரக்டர் அனைவரையும் மிரள வைத்தது.

இதையும் படிங்க: ரஜினியை ஏமாற்றிய சினிமா உலகம்!.. புரியவைத்து தூக்கிவிட்ட கமல்.. இவ்வளவு நடந்திருக்கா?!…

அதே போல் கர்ணன் திரைப்படமும் அடுத்த கட்டத்திற்கு தனுஷை கொண்டு சென்றது. இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தின் போது தனுஷ் ராயன் என்ற திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

அதாவது அந்த நேரத்தில் செல்வராகவன் ஒர் பெரிய படத்தை எடுத்து அதில் எந்த லாபமும் இல்லாமல் இருந்தாராம். அதனால் அண்ணனுக்காக ஒரு படத்தில்  நான் நடிக்க இருப்பதாகவும் அதை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்றும் கலைப்புலி எஸ். தாணுவிடம் கூறியிருக்கிறார் தனுஷ்.

கலைப்புலி தாணுவும் இந்த நேரத்தில் உதவி செய்யத்தான் நான் இருக்கேன் என்று சொல்லி அந்தப் படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்தாராம். அதே நேரத்தில்தான் மாரிசெல்வராஜின் கர்ணன் திரைப்படத்திலும் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பில்லு கட்ட காசு இல்ல.. இதுல ஜுவல்லா?… கோபி சார் நீங்க காலி தான் போலயே..!

பகல் நேரத்தில் கர்ணன் திரைப்படத்திலும் இரவு நேரத்தில் ராயன் திரைப்படத்திலும் நடிக்க தனுஷ் தயாராக இருந்தாராம். ஆனால் இப்படி உறக்கமில்லாமல் இரவு பகல் மாறி மாறி நடித்தால் அவர் உடம்பு என்ன ஆகுறது?

அதுவும் மாரிசெல்வராஜுக்கும் பதில் சொல்லமுடியாது என்று நினைத்த தாணு தனுஷிடம் ராயன் திரைப்படத்தை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாம். கர்ணன் திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.