ராயன் படத்தில் பிரகாஷ்ராஜுடன் போலீசாக வந்தவர் இந்த பிரபலத்தின் கணவரா? நோட் பண்ணுங்கப்பா..
Raayan: நடிகர் தனுஷ் பல வருடங்கள் கழித்து இயக்கி இருக்கும் திரைப்படமான ராயனில் மேலும் சில ஆச்சரிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.
நடிகராக என்ட்ரி கொடுத்தவர் தனுஷ். முதல் சில படங்களில் நிறைய விமர்சனங்கள் மட்டுமே அவருக்கு குவிந்தது. ஆனால் அதையெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய இலக்கில் முன்னேறி இன்று தமிழ் சினிமாவிற்கே ஒரு அடையாளமாக மாறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?
தமிழை தாண்டி ஹிந்தி ஹாலிவுட் வரை சென்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது குபேரன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார். மேலும் சில இயக்குனர்களிடம் வரிசையாக கதை கேட்டுக் கொண்டும் இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் இயக்குனர் தனுஷாக வெற்றியும் கண்டு விட்டார்.
முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் அவர் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமான ராயன் ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட இந்த வருடம் தமிழ் சினிமா மிகப்பெரிய ஆட்டத்தில் இருந்த நிலையில் ஓரளவு வசூல் வேட்டையை சரி செய்து இருக்கிறது இத்திரைப்படம். வெளியான சில தினங்களில் 100 கோடியை தாண்டி ஆச்சரியத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அடுத்து இவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் தன்னுடைய அக்கா மகனை நடிகராகிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் மேலும் சில இளம் நடிகர் மற்றும் நடிகைகள் நடித்த வருகின்றனர்.
இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ப்ரோ பாடலில் நான்கு வரிகளை தன்னுடைய மகன் யாத்ராவை எழுத வைத்திருக்கிறார். வரிசையாக தன் குடும்பத்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ஆச்சரிய தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.
ராயன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுடன் இரண்டு உதவி காவலர்கள் வருவார்கள். இதில் ஒன்று சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா. இன்னொருவர் தனுஷின் சொந்த அக்கா கார்த்திகாவின் கணவர் என்பதுதான் அது. இதனால் தான் அவருக்கு படத்தில் அதீத முக்கிய காட்சிகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.