அந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க தனுஷ்... தமிழ் சினிமாவின் பெருமையை சீண்டி பாக்காதீங்க... விவரம் இதோ...

by Manikandan |
dhanush
X

தொடர் OTT தோல்விகளால் துவண்டு போயிருந்த தனுஷிற்கு ஒரு புது தெம்பாய் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். அந்த படத்தின் வெற்றி தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ள்ளது.

அந்த வகையில், தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் என்பதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்களேன் - எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் வேளையில் ஒரு ஷாக்கிங் செய்தி கிடைத்துள்ளது. அதாவது , இப்படம் பொன்னியின் செல்வன் படத்துடன் மோத உள்ளது என.

இதையும் படியுங்களேன் - இன்னுமா விஜய்யை நம்பிட்டு இருக்கீங்க..? பச்ச புள்ளையா பேசிய அந்த மெகா ஹிட் இயக்குனர்.!

ஆம், செப்டம்பர் 30ஆம் தேதியை படக்குழு குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும், பலரும், பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கே ஒரு பெருமை ஏற்படுத்தி தரப்போகிற திரைப்படம். எம்.ஜி.ஆர் - கமல் என பலர் ஆரம்பித்து தற்போது மணிரத்னம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளார் அதனுடன் மோதாதீர்கள் என கேட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் , படம், தீபாவளி தாண்டி தான் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர். பார்க்கலாம் எது எப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்கள் என.

Next Story