இனிமே லேட் பண்ணா பட்டை நாமம்தான்!.. முன்னாடியே சீட் போட்ட தனுஷ்!.. ராயன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

by Saranya M |   ( Updated:2024-06-10 09:02:20  )
இனிமே லேட் பண்ணா பட்டை நாமம்தான்!.. முன்னாடியே சீட் போட்ட தனுஷ்!.. ராயன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..
X

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அந்த படம் வெளியானது. அந்த படத்திற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் கதை எழுதியிருந்தார்.

அதன் பின்னர் செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். செல்வராகவன் அப்பாவை போல இயக்குனராக மாறி பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்கள் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு களம் இறங்கும் 5 திரைப்படங்கள்!.. வேகமாக துண்டை போட்ட விடுதலை 2 டீம்!..

நடிகர் தனுஷின் பிளடிலேயே இயக்குனர் ரத்தம் உள்ள நிலையில், ப. பாண்டி படத்தை இயக்கி அவரும் இயக்குனராக அறிமுகமானார். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை மற்றும் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

தனுஷ் ஹீரோவாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், இயக்குனராக மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் அண்ணன் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாய் பாசத்துல நயன்தாரா செய்யும் அலப்பறை!.. குவியும் புகார்கள்!.. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க!..

இந்த மாதம் ராயன் படம் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படம் வெளியாக உள்ள நிலையில், தனுஷின் படம் அடுத்த மாதம் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் தற்போது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூலை 26ம் தேதி படம் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக உள்ளது. சியான் விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்பாக தனுஷ் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி விட்டது. ஆகஸ்ட் மாதமாவது தங்கலான் வருமா? என்பதை பார்ப்போம்.

இதையும் படிங்க: அமீர் பிரச்சினையில் சூர்யாவின் அமைதிக்கு காரணம்! குடும்பமே சேர்ந்து கமுக்கமா இருந்தது இதுக்குத்தானா?

Next Story