பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!..

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயல் திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென அந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக அது என்றும் ஜூலை மாதத்துக்கு தள்ளி போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
அந்த வதந்திகளை உடனடியாக நிறுத்த நினைத்த தனுஷ் தற்போது அதிரடியாக ராயன் படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட் ஸ்டைலில் மாஸ் காட்டும் நாட்டாமை மகள்… கல்யாணம் எப்போ, எங்க தெரியுமா?
ப. பாண்டி படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. ராயன் படத்தில் தனுஷ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தவர் நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளாக அடங்காத அசுரன் பாடல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரண்டாவது சிங்கிளாக வாட்டர் பாக்கெட் பாடலும் வெளியானது. அந்த பாடல் தற்போது ஒரு மில்லியன் வியூசை கடந்துள்ளது.
இதையும் படிங்க: மனுஷன் இப்படி மாறிட்டாரே!.. வெற்றிமாறனை எப்படி கூப்பிடுகிறார் தெரியுமா? வாய்பிளக்கும் திரையுலகம்!
ராயன் திரைப்படம் கடைசி நேரத்தில் திட்டமிட்டபடி வெளியாகாத என்றும் ஜூன் மாதத்துக்கு பதிலாக ஜூலை மாதத்திற்கு அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ராயல் படத்துக்கு பேக்ரவுண்ட் ஸ்கோர் பணிகளை முழுவதுமாக முடித்து விட்டால். உங்களை நோக்கி ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது என தனுஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார். இதன் மூலம் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி திட்டவட்டமாக தள்ளிப் போகாது என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யா பார்த்தா ஃபீல் பண்ணுவாரு!.. வணங்கானில் இறங்கி அடித்திருக்கும் பாலா!.. வட போச்சே!