Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயனை மனதில் வைத்து தனுஷ் பேசிய அந்த வசனம்! இதுவரைக்கும் யாரும் நோட் பண்ணாத விஷயம்

 Actor Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பல தடைகளை தாண்டி தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் தன்னுடைய உயரம் என்ன என்பதை சமீபகாலமாக நிரூபித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்து இன்று சர்வதேச தரத்தில் உயர்ந்து நிற்கிறார் தனுஷ்.  நடிப்பில் மட்டுமில்லாமல் தோற்றம், உடல்வாகு, என அனைத்திலும் தன்னுடைய வளர்ச்சியை புதுப்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க : புடவை விலக்கி அழகா காட்டும் காவ்யா!.. அந்த அழகை ரிப்பீட் மோடில் பார்க்கும் புள்ளிங்கோ!…

இந்த நிலையில் அவருக்கு நிகராக பேசப்பட்ட நடிகர் யாரென்றால் அது சிவகார்த்திகேயன். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். துணை நடிகராக நடித்து அதன் பின் நடிகராக மாறினார்.

ஆனால் இன்று சிவகார்த்திகேயன் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் நிற்கிறார் என்றால் அவருடைய விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணமாகும். ஆனால் ஆரம்பத்தில் தனுஷ் புகழை பாடி வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்திற்கு பிறகு தனுஷை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்.

இதையும் படிங்க :  ‘KH234’ லிருந்து வெளியேறிய சிம்பு! பொன்னியின் செல்வனில் இருந்து தொடரும் பிரச்சினை – இதற்கு முடிவே இல்லையா?

எல்லா விழாக்களிலும் ஒன்று போல் இணைந்தே வந்த சிவகார்த்திகேயனும் தனுஷும் இப்போது ஒருவர் வந்தால் இன்னொருவரை பார்க்க முடியாதவாறு இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இன்று வைரலாகி வருகின்றது.

அதாவது அப்பா பெயரும் மகன் பெயரையும் சேர்த்து ஒரே பெயராக கொண்டவராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார் என்று கூறினார். மேலும் இதை வைத்தே சிவகார்த்திகேயனை பற்றி ஒரு ரூமரை மரியான் படத்தில் வைத்தேன் என்றும் தனுஷ்  கூறினார்.

இதையும் படிங்க : கமலுக்கு அடுத்த படியாக அந்த ஒரு விஷயத்தில் இவர்தான்! சரத்குமாரை அடுத்து அடுத்த புரளியை கிளப்பிய அபிராமி

அந்த படத்தில் தகப்பன் சாமியின் பெயரையும் மகன் சாமியின் பெயரையும் தன் பெயராக கொண்ட ஒரு நடிகர்  பூ நடிகையுடன் காதலா? என்ற வசனத்தை பேசியிருப்பார். இதை சிவகார்த்திகேயனை வைத்துதான் பேசினாராம்.

Published by
Rohini