தூம்4 படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோவா?.. மிரட்டலா இருக்குமே!

by Akhilan |
தூம்4 படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோவா?.. மிரட்டலா இருக்குமே!
X

#image_title

Dhoom4: பிரபல இந்தி சூப்பர்ஹிட் படமான தூம் திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் வில்லனுக்கு தமிழ் நடிகரிடம் பேசி வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில் முதன்முதலாக 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் தூம். இப்படம் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற இதே ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த பாகங்கள் உருவானது. அடுத்தடுத்த பாகங்கள் வில்லன்கள் மிகப்பெரிய ஹீரோக்களாக இருந்தனர்.

இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…

இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் வில்லன் வேடம் ஏற்றனர். முதல் பாகத்தை விட 2006ம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் சூப்பர்ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து 7 ஆண்டுகள் இடைவேளைக்கு பின்னர் தூம் மூன்றாம் பாகம் ரிலீஸ் ஆனது. இதில் அமீர்கான் வில்லனாக நடித்தார். அதுவும் வசூலை குவித்தது.

Dhoom

இந்நிலையில் இப்படத்தின் நான்காம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கின்றனராம். முக்கியமாக இந்த பாகங்களின் வில்லன்களுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ஹீரோக்கள் வில்லன்களாக நடித்துவிட்டனர்.

இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்

தற்போது நான்காவது சீசனுக்கு வில்லனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வில்லன் வேடத்தில் தெறிக்கவிட்டு இருப்பார்.

10 நிமிட கேரக்டரை தூக்கி நிறுத்திய சூர்யா கண்டிப்பாக இதை ஒப்புக்கொண்டால் வேறு மாதிரி இருக்கும் எனவும் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story