கமலுக்கு மட்டும் அத்தனை கோடி!.. ரஜினி என்ன தக்காளி தொக்கா?.. ரொம்ப வருத்தம்ப்பா!

Rajinikanth and Kamal Haasan: நடிகர் கமலஹாசனை விட அந்த விஷயத்திற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் உச்சபட்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், கமல் அவரை விட மிஞ்சி விட்டாரா என்கிற கேள்வி தான் தற்போது கோடம்பாக்கத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் 600 கோடி அளவுக்கு வசூல் ஈட்டிய நிலையில், சன் பிக்சர்ஸ் கூடுதலாக செக் மற்றும் சொகுசு காரை ரஜினிக்கு பரிசாக வழங்கியது. ஜெயிலர் படத்துக்காக 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் ஒட்டுமொத்தமாக 180 கோடி ரூபாய் வரை அந்த படத்தின் மூலம் லாபம் அடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படியொரு காமெடி வில்லனை பார்த்திருக்கவே மாட்டீங்க!.. மாஸ் காட்டியதா மார்க் ஆண்டனி?.. விமர்சனம் இதோ!..

இந்நிலையில், அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு 40 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த படத்தில் தனக்கு சம்பளம் தேவை இல்லை என்றும் 40% ஷேர் லாபத்தில் இருந்து ஷேர் கொடுத்தால் போதும் எனக் கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் 25 கோடி பட்ஜெட்டில் படத்தை இயக்குகிறேன் என ஆரம்பத்தில் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுமார் 50 கோடி வரை படத்தின் பட்ஜெட்டை நீட்டி விட்டார் என்கின்றனர். இதன் காரணமாக படத்தின் லாபத்தில் இருந்து ஷேர் வாங்கும் தனது முடிவை நடிகர் ரஜினிகாந்த் மாற்றிவிட்டார் என்றும் அதற்கு பதிலாக சம்பளமாக கொடுத்து விடுங்கள் என லைகாவிடம் முறையிட்ட நிலையில் ரூபாய் 40 கோடி சம்பளம் லால் சலாம் படத்தில் நடித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப் போவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: செஞ்ச தப்புக்காக வாத்தியாரா மாறின சூரி!… அதெப்படி திமிங்கலம் முடியும்…

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி திரைப்படத்தில் வெறும் 20 நாட்கள் கமல் கேமியோ ரோலில் நடித்ததற்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேமியோ ரோலில் நடிக்க கமலுக்கு 150 கோடி ரூபாய் கொடுக்கப்படும் நிலையில், லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள ரஜினிகாந்துக்கு வெறும் 40 கோடி சம்பளம் தானா என்கிற கேள்வி தற்போது கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது.

ஆனால், லால் சலாம் படத்தின் பட்ஜெட்டுக்கும் வியாபாரத்துக்கும் பிரபாஸின் கல்கி படத்தின் பட்ஜெட்டுக்கும் வியாபாரத்துக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறுகின்றனர். மேலும், ரஜினிகாந்த் சுமார் 8 நாட்கள் மட்டுமே லால் சலாம் படத்தில் நடித்தார் என்றும் கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story