இன்ட்ரோல பாசமலர் பாட்டு.. புடிச்சிட்டேன்.. லியோ ஹாலிவுட் காப்பியில்ல.. ஜெயிலர் பட காப்பி!..

Published on: October 10, 2023
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் காப்பி என்றும் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் தழுவல் என்பதை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் லியோ திரைப்படம் எல்சியூ வா என்பதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்நிலையில், அந்த இரண்டு படங்கள் எல்லாம் இல்லை சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் காபிதான் லியோ படம் என ரஜினி ரசிகர்கள் அதிர வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷூட்டிங் வந்த இடத்துல காதலுடன் கசமுசா!.. கடுப்பான பிரபல நடிகர்.. ஹீரோயினையே மாத்த இதுதான் காரணமா?..

அதற்கு காரணம், சமீபத்தில் லியோ படத்தில் எந்த ஒரு ஓப்பனிங் சாங் இருக்காது என்றும் முதல் பாதி முழுக்க நடிகர் விஜய் தனது குடும்பத்தை காப்பாற்ற அமைதியாக இருப்பார் என்றும் இரண்டாம் பாதியில் தான் புலியாக மாறுவார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், நாளை லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் ஆன அன்பிலும் பாடல் வெளியாக உள்ள நிலையில், அந்த பாடல் தான் முதல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: படம் கொலைவெறியா இருக்குன்னு வராம போயிடாதீங்க!.. குடும்பங்களை வரவழைக்க லியோ டீம் போட்ட செம பிளான்!..

சமீபத்தில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் ஓப்பனிங் மாஸ் பாடல் இல்லாமல் ரத்தமாரே பாடல்தான் இடம்பெற்றிருந்தது. அதைப்போல, முதல் பாதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியாகவும் இடைவேளைக்கு முன்னதாக டைகர் முத்துவேல் பாண்டியனாக மாறி இருந்தார்.

லியோ படத்திலும் நடிகர் விஜய் பார்த்திபன் ஆக சைலண்டாக இருப்பார் என்றும் குடும்பத்திற்காக தன்னை அறியாமலே லியோ தாஸாக மாறுவார் என்றும் ஜெயலர் படத்தை அப்பட்டமாக காப்பி அடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய நிலையில்தான், விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே சண்டை ஏற்பட காரணமே என்றும் கூறியுள்ளனர்.

லியோ படம் வெளியாகி ஜெயிலர் படத்தைப் போலவே திரைக்கதை அமைந்திருந்தால் நிச்சயம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.