Cinema News
விஜய்யை போலவே சினிமாவுக்கு குட்பை சொல்றாரா மகேஷ் பாபு?.. இந்த பிரபலம் சொல்றதை கேளுங்க!..
மகேஷ் பாபு படங்களை ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாறியவர் தான் விஜய். மகேஷ் பாபுவின் ஒக்கடு திரைப்படம் தான் கில்லியாக மாறியது. அந்த படத்துக்கு பிறகு தான் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவானது.
பிரபுதேவா இயக்கி விஜய் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான போக்கிரி படமும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படம் தான். இப்படி அடுத்தடுத்து மகேஷ்பாபுவை விஜய் ஃபாலோ பண்ணி வந்த காலம் சென்று விட்டு தற்போது விஜய்யை மகேஷ் பாபு பாலோ செய்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..
சர்க்கார் வரி பட்டா, குண்டூர் காரம் என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு புதிய படத்தையும் கொடுக்காமல் சினிமாவுக்கு பிரேக் விடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் உருவாக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கு மேல் தான் படம் வெளியாகும் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இருந்தாலும் ஓவர் சீன் தான்!.. பிறந்தநாளை ராஷ்மிகா எங்கே கொண்டாடியிருக்காரு பாருங்க!..
கடைசியாக மகேஷ்பாபு நடித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமன் படத்திடம் தோல்வியை தழுவியது. சில ஆண்டுகள் வீணாகப் போனாலும் பரவாயில்லை வெயிட்டான படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ராஜமௌலிக்காக தனது இரண்டு வருட கால் ஷீட்டை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி இருக்கிறார் மகேஷ் பாபு எனக் கூறுகின்றனர்.
பிரபாஸுக்கு ஒரு பாகுபலி படத்தை கொடுத்தது போல, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு ஆர்ஆர்ஆர் படத்தை கொடுத்தது போல மகேஷ் பாபுக்கும் ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படத்தை ராஜமௌலி கொடுப்பார் எனக்கு பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வடிவேலு காமெடியால் வந்த பிரச்சனை!.. கூட்டமாக வந்த போலீஸ்!.. பதறிப்போன வைகைப்புயல்!..
ஆனால், அந்த படத்திற்கு பிறகு மகேஷ் பாபு தொடர்ந்து நடிப்பாரா அல்லது மேலும் சில ஆண்டுகள் சினிமாவுக்கு சின்ன பிரேக் விடுவாரா என்கிற கேள்விகளும் தெலுங்கு திரையுலகில் அதிகரித்து வருகின்றன.