More
Categories: Cinema History Cinema News latest news

ராட்சசன் படத்துல முதலில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட ஹீரோ யார் தெரியுமா?

விஷ்ணு விஷால் தயாரிப்பாளர், நடிகர், கிரிக்கெட்டர் என பன்முகத்திறன் கொண்டவர். வெரைட்டியான திரைக்கதைகளைத் தேடி நடிப்பவர். இவர் குறித்து நாம் அறிந்திடாத சில தகவல்களைப் பார்ப்போம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.

Advertising
Advertising

கார்டன் படத்தில எனக்கு கொஞ்சம் அடிபட்டு ரெஸ்ட்ல உட்கார வச்சிட்டு. உடனே உடம்பு வெயிட்டும் போட்டுடுச்சு. அந்த டைம் பேமிலியும் 2 இயர்ஸா நல்லா இல்ல. எப்படியும் சிக்ஸ் பேக் போடணும்னு ஆசை. நல்லா சாப்பிடுவேன். அதனால நானே 6 பேக் வரமுடியுமான்னு நம்பல. என்னை சுற்றி உள்ளவங்க நம்பவே இல்ல.

அதனால வெயிட்ட குறைக்க டாக்டர் சொன்னதையும் கேக்காம ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். ஹரிபிரசாத் ட்ரெய்னர். அவருக்கிட்ட என்னோட ஆசையை சொன்னேன். பண்ணிக்கலாமேன்னார். எல்லாரும் இப்படி தான் சொல்வாங்க.

ஆனா…நான் வர முடியாது. நீங்க நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. வந்துடலாம்னார். செஞ்சி பார்த்தேன். ஆரம்பத்துல புஷ் அப்ஸ் கூட பண்ண முடில. ஆனால் டிசம்பர் 31ஸ்ட்ல போட்டோ எடுத்து பேமிலியோட நியூ இயர கொண்டாடினேன்.

vishnu vishal in 6 bag

எனக்கு என்ன தோணுதோ அதைப் பண்றேன். நெகட்டிவான ஆள்களை நான் தள்ளியே வச்சிக்கிட்டு இருக்கிறேன்.

காடன் படத்தில நடிச்ச யானையோட பேரு உன்னிகிருஷ்ணன். எடுத்த உடனேயே உருண்டைய உருட்ட ஆரம்பிச்சிட்டேன். கொஞ்ச நாள்ல இவன் நமக்கு சாப்பாடு கொடுக்கறவன்னு நம்ப ஆரம்பிச்சிட்டு.

45 நாள்களுக்கு அப்புறம் ஷ_ட்டிங் முடிஞ்சி போகும்போது திரும்ப இவன நான் எப்பப் பார்ப்பேன்னு பீல் ஆனது. கொஞ்ச நாள்ல யானை என்னோட நல்லா பழக ஆரம்பிச்சிட்டுது. நடிக்கும்போது யானை மேலேயே தூங்க ஆரம்பிச்சிட்டேன். ரெஸ்ட் எடுத்தேன். லஞ்ச் சாப்பிட்டேன்.

ஆரம்பத்தில சினிமாவுக்குள்ள வரும்போது எங்க போனாலும் என்னை ரிஜெக்ஷன் பண்ணாங்க. நான் எப்பவுமே விரும்புறது புது டைரக்டரத்தான். அவங்க தான் எப்பவுமே பிரஷ்ஷான கதையை வச்சிருப்பாங்க. முனீஸ்காந்த் முண்டாசுப்பட்டில புதுசு தான். ராட்சசன் படத்துல டைரக்டரும் புதுசு தான். ராம்குமார். இவர் தான் டைரக்டர்.

ratshsasan vishnuvishal

ராட்சசன் படத்தில கதையைக் கேட்டதும் எனக்கு முதல்ல வில்லன் ரோலக் கொடுங்க. நான் நடிக்கிறேன். ஏன்னா அது தான் பவர்புல்லா இருக்குன்னு சொன்னேன். உடனே இல்லங்க. அதுக்கு ஒருத்தர் 1 வருஷமா ஒர்க் அவுட் பண்ணி பாடி வெயிட்டல்லாம் குறைச்சி வச்சிருக்காருன்னு சொன்னேன். இப்ப அவர மாத்துனா அது நல்லா இருக்குமான்னு தெரில…ன்னு சொன்னார்.

உடனே ஓகே. ஒன் இயர் ஒர்க் அவுட் பண்ணுனார்னா அவரு எவ்ளோ எபோர்ட் போட்டுருக்காருன்னு எனக்கு தெரியும். என்னால அவரு வாய்ப்பு பறி போயிடக்கூடாது. நான் என் வாழ்க்கையை விட்டுட்டு இன்னொருத்தருக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லல. என்னால அதை பண்ண முடியும். என் வாழ்க்கையும் நல்லா இருக்கும்னா கண்டிப்பா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். இது தான் என்னோட சினிமா அணுகுமுறை.

Published by
sankaran v

Recent Posts