More
Categories: Cinema News latest news

இப்படியே போனா எல்லா படமும் ரெண்டு பார்ட்டுதான்!.. தயாரிப்பாளர்களை கதறவிடும் ஷங்கர்…

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் ஷங்கர். முதல் படத்திலேயே அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தார். அதற்கு காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன். முதல் படமே அப்படி அமைந்துபோனதால் அடுத்தடுத்து அதிக பட்ஜெட்டிலேயே ஷங்கர் படங்களை இயக்க துவங்கினார்.

காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன் என அதிக பட்ஜெட்டில் படம் இயக்கி இந்தியாவில் பெரிய இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய ஐ, பாய்ஸ், எந்திரன், சிவாஜி, 2.0 என அனைத்து படங்களுமே அதிக பட்ஜெட்டில் உருவானவைதான்.

Advertising
Advertising

இதையும் படிங்க: வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்

இப்போது ஷங்கரே நினைத்தாலும் குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது. ஏனெனில் அதுவே அவரின் ஸ்டைலாக மாறிப்போய்விட்டது. இப்போது ஒரு பக்கம் கமலை வைத்து இந்தியன் 2 ,ஒரு பக்கம் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து தி கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இரண்டு படங்களுமே அதிக பட்ஜெட் படங்கள்தான். இந்தியன் 2 படத்தில் ஷங்கர் எடுத்துள்ள அதிக காட்சிகளை பார்த்த லைக்கா நிறுவனம் ‘படத்தோட பட்ஜெட் எகிறத பாத்தா இந்தியன் 3-யும் சேர்த்து எடுத்திடலாம்’ என ஏற்கனவே சொல்லிவிட்டது. தற்போது கேம் சேஞ்சர் படத்திலும் இதுவே நடந்துவிட்டது.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஷங்கர் ஸ்கேனிங் செய்த இடத்தில் விஜய்!.. இந்தியன் 2 ரேஞ்சுக்கு சென்ற தளபதி 68!..

இப்படத்தை தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தில் ராஜு தயாரித்து வருகிறார். ஷங்கர் செய்கிற செலவையும் எடுக்கும் காட்சிகளையும் பார்த்த அவர் ‘செஞ்ச செலவுக்கு 2 பார்ட்டா எடுத்தாத்தான் எனக்கு நஷ்டம் வராம தப்பிக்க முடியும்’ என ஷங்கரிடமும், ராம்சரணிடமும் சொல்லிவிட்டாராம். ஆனால், அவர்கள் இருவரும் இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.

கேம் சேஞ்சர் ஒரே படமாக வருமா இல்லை இரண்டு படமாக வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படியே போனால் ஷங்கர் எடுக்கும் எல்லா படங்களும் இனிமேல் இரண்டு பார்ட்டாத்தான் வரும் போல!…

இதையும் படிங்க: சந்திரமுகி 2-வில் ரஜினி நடிக்காமல் போனதற்கு காரணம் ஷங்கர் – என்னப்பா சொல்றீங்க!..

Published by
சிவா

Recent Posts