ரச்சிதாவுக்கு இருக்கும் நூதன நோய்..! இதனால் தான் தினேஷுடன் விவகாரத்தா?

Published on: December 26, 2023
---Advertisement---

Rachitha Mahalakshmi: தமிழ் சீரியல் உலகில் ஹிட்டடித்த ரச்சிதாவின் வாழ்க்கையில் தற்போது சோக அலை வீசி வருகிறது. அதாவது அவருக்கும், தற்போது பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரும் அவர் கணவருமான தினேஷுக்கும் விவகாரத்து நடக்க இருப்பதாகவும், அதன் காரணத்தையும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலில் அவருக்கு நல்ல ரீச் கிடைத்ததால் தொடர்ந்து விஜய் டிவியின் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து வந்தார். அவர் நாயகியாகவே மூன்று சீசன்கள் சென்றது.

இதையும் படிங்க: இப்பவே ஆப்பு வைக்க ரெடியாகிட்டாங்க! தளபதி 68 ஆல் படாதபாடு படப் போகும் விஜய்

தன்னுடைய சீரியல் உலகின் முதல் நாயகனான தினேஷை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே குழந்தை இல்லை. இதுவே அவர்கள் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்னையாகவும் வலம் வந்து இருக்கிறது. கடந்த சீசனில் ரச்சிதா போட்டியாளராக உள்ளே சென்று நல்ல பெயருடனே வெளியில் வந்தார்.

அதை தொடர்ந்து இந்த சீசனில் அவரின் கணபர் தினேஷ் கலந்து கொண்டு இருக்கிறார். ரச்சிதா உள்ளே இருக்கும் போது அவருக்கு தினேஷின் ஆதரவு இருந்தது. ஆனால் ரச்சிதா தன்னுடைய ஆதரவை விசித்ராவுக்கே கொடுத்து இருக்கிறார். மேலும் அப்பா இறந்து தற்போது அம்மாவுடன் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: வைரமுத்துவுக்கு இதை செய்த ரஹ்மான் சிவகார்த்திகேயனுக்கு ஏன் செய்யல?.. பிரபலம் கேள்வி!..

இன்ஸ்டாகிராமில் தான் விரைவில் சாக போவதாக கூட பதிவு போட பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தனர். அதை தொடர்ந்து தற்போத் மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலும் வெளிவந்து இருக்கிறது. ரச்சிதாவுக்கு சாப்பிடாமலே உடல் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம். இந்த விஷயத்தினை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தும் கூட அதில் முன்னேற்றம் இல்லையாம். இதனால் அவருக்கு ஏகப்பட்ட மன உளைச்சலும் அதை தான் வெளிக்காட்ட தெரியாமல் தினேஷிடம் சண்டையிட்டு பிரிந்து இருக்கிறாராம். மாமியார், மாமனார் கூட வெகுளியாகவே இருக்கிறார்கள். சண்டையை பேசி சரி செஞ்சிக்கோங்க என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.