போர இடமெல்லாம் கன்னிவெடி! விக்ரம் படத்திலயும் படாத பாடு பட்ட அமீர் – 10 லட்சம் கொடுத்தும் புண்ணியமில்ல

Published on: November 29, 2023
ameer
---Advertisement---

Director Ameer: அமீர் – ஞானவேல் ராஜா சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒரு பக்கம் சூடுபிடித்திருக்க அமீர் ஒரு பேட்டியில் விக்ரம் பட பிரச்சினை தொடர்பாக ஒரு சம்பவத்தைக் கூறினார். விக்ரம் – அனுஷ்கா நடிப்பி வெளியான திரைப்படம் தாண்டவம்.

அந்தப் படம் வெளியான நேரத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளானது. அதாவது தாண்டவம் படம் திருட்டுக் கதையில் எடுக்கப்பட்டது என்ற புகார் எழுந்தது. அந்த நேரத்தில் அமீர் இயக்குனர் சங்க செயலாளராக இருந்தாராம். அவரிடம் தாண்டவம் என்னுடைய கதை என ஒருவர் புகார் அளிக்க வந்தாராம்.

இதையும் படிங்க: நீங்க அமைதியா இருக்கது தப்பு.. கார்த்திக்கு குட்டு வைத்த ’பருத்திவீரன்’ குட்டி சாக்கு…

அப்போது அமீர் இயக்குனர் சங்கத்தில் வைத்து பிரச்சினையை பேசி முடிக்காமல் தனது சொந்த அலுவலகத்திலேயே இந்த பிரச்சினையை பேசி சரி செய்திருக்கிறார். ஏ.எல்.விஜய் மற்றும் தனஞ்செயன் முன்னனிலையில் புகார் அளிக்க வந்தவரிடமும் பேசி படத்தில் அவர் பெயரையும் போட வைத்து 10 லட்சம் தொகையையும் வாங்கிக் கொடுத்தாராம் அமீர்.

ஆனால் வாங்கியவர் சும்மா இல்லாமல் வேறு சிலரின் தூண்டுதலால் நேராக நீதிமன்றத்தில் இந்த பிரச்சினையை கொண்டு போனாராம். ஆனால் நீதிமன்றத்தில் இந்த கேஸ் இழுத்துக் கொண்டே போக புகார் அளித்தவருக்கு பணமும் செலவாக நேராக பாரதிராஜாவிடம் இந்த பிரச்சினை வந்திருக்கிறது.

இதையும் படிங்க: மாஸ் காட்டி வைரலான மீனா..! சைடு கேப்பில் காரியத்தினை சாதிக்க திட்டம் போட்ட விஜயா.. மீண்டும் ஆரம்பித்த ஸ்ருதி..!

அந்த நேரத்தில் ஏற்கனவே பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் இடையே பிடிக்காமல் இருந்ததாம். தனக்கு எதிராக அமீர் செயல்படுகிறார் என பாரதிராஜா அமீர் மீது கோபத்தில் இருந்தாராம். இருந்தாலும் உண்மையில் என்ன நடந்தது என அமீர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இதற்கிடையில் பாரதிராஜா கிட்டத்தட்ட 150 இயக்குனர்களை வரவழைத்து அமீரிடம் விளக்கம் கேட்டாராம். எதற்கும் துணிந்த அமீர் எல்லா நடந்த விஷயங்களையும் சொல்ல முதல் ஆளாக வெற்றிமாறன் அமீருக்கு ஆதரவாக ‘அவர் சொல்வதுதான் சரியாக இருக்கிறது. அவர் மீது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது’ என குரல் கொடுத்தாராம்.

இதையும் படிங்க: ஏலேய் எங்களை பாத்தா எப்படி தெரியுது..? மூணு நாளா ஒரே சண்டையை வச்சு ஓட்டும் பாக்கியலட்சுமி டீம்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.