தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தமிழகமெங்கும் சுற்றுபயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு நேரில் சென்று விசாரண நடத்தினார்கள். அதோடு தவெக தலைவர் விஜய் கடந்த ஜனவரி 6ம் தேதி டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார் விஜய். அதன்பின் சில நாட்களில் மீண்டும் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். அதன்பின் விஜய்க்கு எவ்வித அழைப்பும் வரவில்லை . இதனால் விஜயுடனான விசாரணை முடிந்து விட்டதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் மார்ச் 10ம் தேதியான நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விஜய் தரப்பில் தேர்தல் பணிகள் இருப்பதால் இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் சொல்லும் தேதியில் நான் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்றும், மேலும் டெல்லியாக இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேயே விசாரணைக்கு ஆஜராக விரும்புகிறேன் எனவும் விஜய் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது என்டிஏ கூட்டணியில் விஜய் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடப்பதாகவும், கூட்டணியில் இணையவைக்கவே இந்த அழைப்பு என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான அமீர் தனது வாட்ஸபில் ஒரு ஸ்டேடஸ் வைத்துள்ளார். அதில் சிபிஸ் விசாரணைக்கு பயந்து என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து விடாதீர்கள். அத்தோடு உங்க அரசியல் முடிஞ்சிடும் என்று பதிவிட்டுள்ளார்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com





