Cinema History
80ஸ் மட்டுமல்லாம 2கே கிட்ஸ்களையும் தட்டிதூக்கிய டி.ராஜேந்தர்… யாருமே அறியாத அந்த சில தகவல்கள்
தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்து அதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் பன்முகத்திறன் கொண்ட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர்.
டி.ராஜேந்தர் கல்லூரி படிப்பு முடிந்ததும் அப்போது சினிமாவில் மேல் உள்ள ஆர்வத்தால், தன் நண்பர்கள் மத்தியில் ‘ஒரு காலத்தில் நானும், கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம்னு அத்தனை வேலைகளையும் ஒட்டுமொத்தமாக நானே செஞ்சி சினிமா எடுப்பேன் பாருங்கடா’ன்னு சொன்னாராம்.
இதையும் படிங்க… ஜெமினிகணேசனை ‘சாம்பார்’னு ஏன் சொன்னாங்க தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
அதற்கு ‘அப்படி எடுத்தா அந்தப் படத்தை நீ தான் பார்க்கணும்’னு கிண்டல் அடித்தார்களாம். ஆனால் அது அவரது தீவிர முயற்சியால உண்மையானது. இவரைப் பற்றி இன்னும் அறியாத பல தகவல்களைப் பார்ப்போமா…
மோகனுக்காக கிளிஞ்சல்கள் படத்திற்கு இசை அமைத்துப் பாடல்களை செம ஹிட்டாக்கினார். கேப்டன் விஜயகாந்துக்காக ‘சட்டம் சிரிக்கின்றது’ மற்றும் கூலிக்காரன் என்ற சூப்பர்ஹிட் படத்திற்கும் மியூசிக் போட்டது டி.ஆர்.தான். இவர்கள் வரும் காலத்தூண்கள் படத்தில் பிரபுவுக்காக இசை அமைத்துள்ளார்.
அதே போல சிவாஜி, பாண்டியராஜன், சத்யராஜ் நடித்த ‘முத்துக்கள் மூன்று’ படத்திற்கு இசை அமைத்தார். என் தங்கை கல்யாணி படத்தில் தான் முதன்முதலாக வைகைப்புயல் வடிவேலு தலைகாட்டி தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
யுவன் சங்கர் ராஜா மியூசிக்கில் ‘யம்மாடி யாத்தாடி’ பாடலைப் பாடி அசத்தினார். ஆர்யா நடித்த ஓரம்போ படத்திற்காக கன் கணபதி என்ற பாடலைப் பாடினார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
ஒஸ்தி படத்தில் தமன் மியூசிக்கில் ‘கலா சலா கலசலா’ என்ற குத்துப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து டி.ராஜேந்தர் பாடி இப்போ உள்ள 2கே கிட்ஸ்களையும் ஆட்டம் போட வைத்தார்.
இதையும் படிங்க… கொய்யால தல யாரு! முடிஞ்சா கொடுங்க… சிறுத்தை சிவா கூட்டணியில் இருக்கும் சிக்கல்
இது அவர் ஹைபிட்சில் பாடிய பாடல். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தெறி படத்தில் விஜய்க்காக ‘உன்னால நான் கெட்டேன்’ பாடலைப் பாடினார். அதே போல சி.சத்யா மியூசிக்கில் ‘தம் கட்டலாம்’ என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனுவிற்காக இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
டி.ஆர். கடைசியாக நடிச்ச கவன் படத்தில் பாடிய ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் செம ஹிட்.