Ajith: அஜீத்துக்கு சவால் விடும் பாலா... குருவுடன் மோதும் சிஷ்யன்?
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. அதற்காக தாடி எல்லாம் வளர்த்தார். அஜீத் பாலாவிடம் முழு கதையும் சொல்லுங்கன்னு கேட்டார். அதற்கு நான் யாருக்கும் முழு கதை எல்லாம் சொல்றது இல்லன்னாரு.
அதுக்கு அஜீத்தும் நான் யாருக்கிட்டேயும் முழு கதையையும் கேட்காம படத்துல நடிக்கிறது இல்லன்னாரு. அப்படித்தான் அவர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது என்கிறார் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன். வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.
Also read: எம்ஜிஆர் சொன்னதையே கேட்கல.. விஜய் சொன்னா மக்கள் கேட்பாங்களா? நடக்காது
இந்த நிலையில் அருண் விஜய் நடிக்குற படம் வணங்கான். படத்தைப் பார்த்ததும் நான் நடித்த படத்திலேயே சிறந்த படம்னு பாலாவைக் கட்டியணைத்து முத்தமிட்டார் அருண்விஜய்.
முதல்ல இந்தப் படத்துக்கு சூர்யா தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஜோதிகா தயாரிப்பதாக இருந்தது. 15 நாள் படப்பிடிப்பு நடந்தது. சூட்டிங் போற இடத்துல தன்னோடு ஜோதிகாவுக்கு லாட்ஜ்ல ரூம் போட்டுக் கொடுத்தாரு. சூர்யாவுக்கு வேற ஒரு இடத்துல ரூம் போட்டுக் கொடுத்தாரு.
அதுவே அவருக்குப் பாலா மேல வெறுப்பாயிடுச்சு. அப்புறம் சூட்டிங்க்ல ஒரு கிலோ மீட்டருக்குத் தினமும் ஓடவிட்டாரு. ஓடியே மனுஷன் மூச்சிறைச்சிட்டாரு. எந்த ஒரு இயக்குனரும் கதாநாயகன இப்படித் துன்புறுத்த மாட்டாங்க. சேடிஸ்ட் தான் போல இருக்குன்னு நினைச்சி பெட்டி படுக்கையோடு திரும்பிவிட்டார் சூர்யா.
படம் பிளாப் ஆனாலும் பாலாவுக்கு தேசிய விருது கிடைக்கும். மக்கள் பாராட்டுவார்கள். அந்த அடிப்படையில் வணங்கான் அவருக்கு ரீ என்ட்ரி. வணங்கான் படம் பொங்கலுக்கு வருகிறது. நல்ல குதிரை எத்தனை பெரிய குதிரையோடு வந்தாலும் வெற்றி பெறும். என் படமும் வருதுன்னு அஜீத் விடாமுயற்சியை விடுறாரு. ஏற்கனவே அருண்விஜய்க்கு ரீ என்ட்ரி கொடுத்தவர் அஜீத்.
Also read: vidamuyarchi: எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு…. தெறிக்க விட்ட விடாமுயற்சி டீசர்
அவரைத் தனது படத்தில் வில்லனாகப் போட்டு அவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில் குருவும் சிஷ்யனும் மோதுவாகச் சொல்லலாம். ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னா? இப்போ என் படமும் விட்டுருக்கேன். மோதி பாருன்னு பாலா அஜீத்துக்கு சவால் விடுகிறார் என்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.