இத ஏத்து... அத குறைச்சிடு!.. பாலாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அருண் விஜய்!.. வசமா சிக்கிட்ட மாப்ள!...

by சிவா |   ( Updated:2023-09-09 01:35:17  )
arun vijay
X

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய். விஜய், அஜித், பிரசாந்த் ஆகியோருக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தார். ஆனால், பல வருடங்கள் போராடியும் அவருக்கு ஹிட் படம் கிடைக்கவில்லை.

அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வி படங்களே. ஒரு வெற்றிக்காக போராடி கொண்டிருந்த போதுதான் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அவரை அஜித் ரசிகர்களுக்கும் பிடித்துப்போக தியேட்டரில் அவருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் திக்குமுக்காடி போனார்.

இதையும் படிங்க: துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..

அதன்பின் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் உருவான சில படங்கள் பாதி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெளியான சில படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்து வெளியான தடம் படம் மட்டும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் சூர்யா நிராகரிக்கும் கதைகளில் நடிக்க துவங்கினார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த யானை படத்தில் அருண் விஜய் நடித்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதன்பின் பாலாவின் இயக்கத்தில் சூர்யா சில நாட்கள் நடித்துவிட்டு விலகிய வணங்கான் படத்திலும் அருண் விஜயே இப்போது நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்குறாரு! ‘பிக்பாஸில்’ கமல் பண்ண வேலைக்கு பதிலடி கொடுத்த நிர்வாகம்

பாலாவிடம் ஒரு நடிகர் சிக்கினால் அவ்வளவுதான். உடம்பை குறை., முடியை வெட்டாதே. பல மாதங்கள் சேவிங் செய்யக்கூடாது என பல கண்டிஷன்களை போட்டு முகத்தையே மாற்றிவிடுவார். அதாவது அவரின் ஹீரோக்கள் அழகாக இருக்கவே மாட்டார்கள். அருண் விஜயிடம் பாடி ஃபில்டர் போல் உடம்பு இருக்க கூடாது. சாதாரண உடல்வாகு மட்டுமே எனக்கு வேண்டும். கொஞ்சம் தொப்பையும் இருந்தால் நல்லது என சொல்லிவிட்டாராம்.

அருண் விஜயோ தினமும் வொர்க் அவுட் செய்பவர். சிக்ஸ் பேக் வைத்திருப்பவர். பாலா இப்படி சொல்லிவிட்டதால் என்ன செய்வது என புலம்பி வருகிறாராம்.

இதையும் படிங்க: ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..

Next Story