அடிப்பார்.. உதைப்பார்! ஆனால் இதையும் தாண்டி பாலாவின் வேறொரு முகம் பற்றி தெரியுமா?
Director Bala: தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா எப்பவும் ஒரு தனித்துவமான இயக்குனராகவே கருதப்படுகிறார். எத்தனையோ இயக்குனர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் பாலாவும் தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.
சேது திரைப்படம் அவரது வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படம் என்று சொல்லலாம். முதல் படமே தேசிய விருது. யாருக்கு கிடைக்கும் இந்த யோகம்? அந்தப் படத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இன்றுவரை பாலாவிற்கு அந்தப் படம் தான் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. அதேபோல விக்ரமுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த படம் சேது .
இதையும் படிங்க: கோயில் கட்டியே கும்பிடலாம் போல!.. ’கோட்’ ஹீரோயின் பெயரை போலவே என்னவொரு தெய்வீக கலை!..
அதன் பிறகு வந்த நந்தா திரைப்படம் அவரின் திறமையை மேலும் மக்கள் அறிய செய்தது. அந்தப் படமும் சூர்யாவுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் நந்தா படத்தின் மூலம் தான் ராஜ்கிரணும் ஒரு குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். அவருடைய மூன்றாவது படம் பிதாமகன். அதில் தனது முதல் இரண்டு ஹீரோக்களை ஒன்று சேர்த்து நகைச்சுவை மற்றும் ஒரு கமர்சியல் பேக்கேஜில் அந்த படத்தை கொடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்தார் பாலா.
இப்படி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கவரப்பட்ட இயக்குனராக பாலா இருந்து வந்தார். அவர் படங்கள் அவர் திறமையை பறைசாற்றுவனாக இருந்தாலும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை அவர் அடித்து தான் நடிப்பை வாங்குவார் என்பது. அதனாலையே அவருக்கு பயந்து ஒரு சில நடிகர் நடிகைகள் அவர் படத்தை தவிர்த்ததும் உண்டு.
இதையும் படிங்க: வைகைப்புயல் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?
ஆனால் பிரபல கதையாசிரியர் நாஞ்சில் நாடன் பாலாவை பற்றி யாரும் அறிந்திராத அவருடைய இன்னொரு முகத்தை பற்றி கூறியிருக்கிறார். பரதேசி படத்தில் நாஞ்சில் நாடன் கதாசிரியராக பணிபுரிந்தார். அப்பொழுது அவருடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது என்னை கதாசிரியராக பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவே பார்த்தார் எனக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பாலாவிடம் சிறு குழந்தைத்தனமும் அதிக அன்பையும் பார்க்க முடிந்தது. அனைவருமே பாலாவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அந்தப் படத்தில் நான் பணியாற்றும் பொழுது இப்படிப்பட்ட நபரையா இந்த அளவுக்கு பேசி வருகிறார்கள் என சில சமயங்களில் வருத்தப்பட்டதும் உண்டு. அந்த படத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று நடித்திருக்கும் .
இதையும் படிங்க: ஆதி அண்ணாவை பார்க்கணும்னு அடம் பிடிச்ச ரசிகை!.. தேடி பிடித்து PT சார் என்ன பண்ணாருன்னு பாருங்க!
நடித்துவிட்டு அந்த குழந்தையின் அம்மா அதற்கான சம்பளத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்பிலிருந்து விடை பெற்றார். ஒரு 10 அடி தூரம் சென்ற பிறகு பாலா அந்த அம்மாவை அழைத்து எம்மா இங்க வாங்க என கூப்பிட்டு தன்னிடம் இருந்த சில ஆயிரங்களை அந்த அம்மாவிடம் கொடுத்து நல்ல பாத்துக்கோங்க குழந்தையை என்று சொல்லி அனுப்பினார். அதை பார்க்கும் பொழுது இப்படி ஒரு குழந்தை மனம் படைத்தவரா பாலா என்று என்னால் உணர முடிந்தது என நாஞ்சில் நாடன் கூறியிருக்கிறார்.