Connect with us
Vadivelu24

Cinema History

வைகைப்புயல் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தர் என்று ரசிகர்கள் சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார். வாங்க என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை ஜாம்பவான்கள் காலகட்டத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் 90 மற்றும் 2000 காலகட்டங்களில் கொடிகட்டிப் பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு.

இவர் நடித்த படம் எல்லாமே செம மாஸாகத் தான் இருக்கும். இவர் திரையில் தோன்றினாலே போதும். நாம் நம்மையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்து விடுவோம். டயலாக்கே பேசாமல் கூட பாடிலாங்குவேஜால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார் வடிவேலு.

IA23P

IA23P

அந்த வகையில் அவரது காமெடிகளும் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அவ்வப்போது மீம்ஸ்களாகி வருகின்றனர். அதனால் இவரை மீம்ஸ் கிரியேட்டர் என்றே சொல்வார்கள். ஒரு காலகட்டத்தில் வடிவேலு கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அப்படி அவர் நடித்த படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. அதற்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி படங்கள் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

அதன்பிறகு சர்ச்சையில் சிக்கிய அவருக்கு மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடம் கிடைத்தது. இது அவருக்கு கொஞ்சம் கம்பேக்கைக் கொடுத்தது. அவரது இடத்தை யோகிபாபு, சந்தானம், சூரி என இளம் நட்சத்திரங்கள் பிடித்துக் கொண்டனர்.

இருந்தாலும் வைகைப்புயல் அளவுக்கு வராது. அது வேற லெவல் காமெடி என்கின்றனர் ரசிகர்கள். தற்போது காமெடியாக நடிக்கும் நடிகர்களே கதாநாயகர்களாகவும் நடித்து வருகின்றனர்.

வைகைப்புயல் வடிவேலுவை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர் தானா என வாசகர் ஒருவர் லென்ஸ் நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு அவர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர் என்று சொல்ல முடியாது.

ஒரு படத்தில் தோன்றக் காரணமானவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். வடிவேலுவை முறையாக அறிமுகப்படுத்தியவர் என்றால் அந்தப் பெருமை ராஜ்கிரணையேச் சாரும் என்று பதில் அளித்துள்ளார்.

Continue Reading

More in Cinema History

To Top