பிரிந்திருந்த சிவாஜி - கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..

இயக்குனர் பீம்சிங் - சிவாஜி படங்கள் என்றால் அந்தக் காலத்தில் செம மாஸாக இருக்கும். மக்கள் மத்தியில் இவர்களது படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். பெரும்பாலான படங்கள் வெற்றி தான். பதிபக்தி, படிக்காத மேதை, பெற்ற மனம், பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா? பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பாலாடை, பாதுகாப்பு என அத்தனை படங்களும் சூப்பர்ஹிட் தான்.

இயக்குனர் பீம்சிங் 1954ல் கருணாநிதி வசனத்தில் எஸ்எஸ்.ராஜேந்திரன் நடித்த அம்மையப்பன் படத்தின் மூலம் அறிமுகமானார். நல்ல கதை அம்சம் கொண்ட படம். திராவிட சித்தாந்த கருத்துகள் இருந்ததால் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதனால் இவரை தோல்வி பட இயக்குனர் என முத்திரை குத்தினர்.

இதையும் படிங்க... வீட்டில் சண்டை போட்டு.. வித்-அவுட் ரயிலில் போய் நடிகனான எம்.ஆர்.ராதா!.. பிளாஷ்பேக் செமயா இருக்கே!..

அதைக் கண்டுகொண்ட நடிகர் திலகம் தன் நடிப்பில் வெளியாக இருந்த ராஜா ராணி படத்துக்கு பீம்சிங்கை பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து இருவரது கூட்டணியில் ராஜா ராணி முதல் பாதுகாப்பு வரை 18 படங்கள் வெளிவந்தன.

1958 முதல் 1965 சாந்தி திரைப்படம் வரை சிவாஜி- பீம்சிங் கூட்டணி இணைபிரியாமல் இருந்தது. பதிபக்தி படத்தில் பீம்சிங்கிற்கு பாடல்கள் திருப்தி இல்லை. அதற்கு ஒரே காரணம் படத் தயாரிப்பாளர்கள் கவியரசர் கண்ணதாசனைத் தவிர்த்தார்களாம். ஆனால் பீம்சிங் கண்ணதாசனை வைத்துப் பாடல்களை எழுதத் தயாராக இருந்தாராம். இதன் பின்னணியில் சிவாஜி, கண்ணதாசன் இடையே சண்டைதான் காரணமாம்.

இதையும் படிங்க... இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! படம் பாக்கவே தோணல.. வெளிப்படையாக விமர்சித்த ஆர்ஜே பாலாஜி

1959ல் சிவாஜி நடித்த பாகப்பிரிவினை படத்தின் தயாரிப்பாளர் வேலுமணி. அப்போது பீம்சிங் இந்தப் படத்தில் கண்ணதாசன் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மட்டுமே நான் இயக்குவேன் என்றாராம். ஆனால் பீம்சிங் சிவாஜியையும், கண்ணதாசனையும் இணைக்க விரும்பியே இந்த நிபந்தனையைப் போட்டாராம்.

அதன்பிறகு சிவாஜி, கண்ணதாசன் கூட்டணி தமிழ்சினிமாவை மேலும் 20 வருடங்களுக்குக் கட்டிப் போட்டது. தொடர்ந்து சிவாஜி பீம்சிங் கூட்டணியில் தொடர்ந்து ப வரிசைகளில் வெற்றிப்படங்கள் வந்து குவிந்தன.

 

Related Articles

Next Story