Connect with us

latest news

மஞ்சுமெல் பாய்ஸை தூக்கி சாப்பிடுமா இந்த மலையாள படம்?.. ஆடு ஜீவிதம் விமர்சனம் இதோ!..

மலையாளத்தில் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெயிட்டான படங்கள் வெளியாகின்றன. கடந்த மாதம் வெளியான சர்வைவர் த்ரில்லர் படமான மஞ்சுமெல் பாய்ஸ் கடைசி வரை ரசிகர்களை கட்டிப் போட்டு 200 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளியது. இந்நிலையில், அடுத்த தரமான படமாக ஆடு ஜீவிதம் வெளியாகி இருக்கிறது.

பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொடைக்கானல் குளிரை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் உணர்ந்த ரசிகர்கள் இந்த படத்தில் சவுதி அரேபியாவின் பாலை வனத்தில் சாகத் தயாராக இருங்கள்.

இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலக கமல்தான் காரணமா? வெளியான ஷாக் தகவல்

ஆடுஜீவிதம் எனும் நாவலை தழுவி உருவான இந்த படத்திற்காக பிருத்விராஜ் தன்னை அப்படியே மொத்தமாக அர்பணித்திருக்கிறார். அவரது நடிப்பை மட்டும் பார்ப்பதற்காகவே உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.

ஜாலியாக கொண்டாட்ட மனப்பான்மையில் பார்ப்பவர்களுக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்குமா என்பது கேள்விக்குறி தான். சவுதிக்கு வேலைக்குப் போறேன் என கிளம்பிச் செல்லும் பிருத்விராஜ் அங்கே நகரத்தில் வேலை கிடக்காமல் பாலை வனத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு அனுப்பப்படுகிறார். துபாய்ல என்ன ஒட்டகம் மேய்க்கிற வேலையா என கிண்டல் செய்வது எல்லாம் சும்மா இல்லை, அப்படி வேலை கிடச்சா என்ன ஆகும் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை இந்த படத்தை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: தமிழில் வெளிவந்த கல்ட் கிளாசிக் திரைப்படங்கள்!. காலம் கடந்து பேசப்படும் குணா!…

அடிமையாக நடத்தப்படுகிறோம் என்பதை புரிந்துக் கொள்ளும் பிருத்விராஜ் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து சொந்த ஊருக்கே போய் பிழைத்துக் கொள்ளலாம். இங்கே இருந்தா மனைவியையும் குழந்தையையும் கடைசி வரை பார்க்காமலே செத்துப் போய் விடுவோம் என்பதை அறிந்து அங்கே இருந்து தப்பிக்க பார்க்கிறார்.

அவர் அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா? எப்படியெல்லாம் பாலை வனத்தில் பிருத்விராஜ் சாப்பாடு, தண்ணியில்லாமல் தவிக்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காட்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.

இதையும் படிங்க: அய்யோ அது பயங்கரமான படமாச்சே!.. அஞ்சான் படத்தை ரீ ரிலீஸ்ல பார்க்க ரெடியா?.. கங்குவா காலி தான்!..

வெளிநாடுகளில் வேலை துபாயில் சம்பாதிக்கிறான் என்றதும் அவங்க எல்லாம் அங்க சந்தோஷமா இருக்கிறாங்க என நினைக்க வேண்டாம் ஒவ்வொருத்தரும் குடும்பத்துக்காக பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் என்பதை இந்த படம் எடுத்துக் காட்டுகிறது.

மலையாள படங்கள் என்றாலே ஸ்லோவாகத்தான் செல்லும். அதிலும், இந்த படம் டெத் ஸ்லோ என்றே சொல்லலாம். படத்தின் மேக்கிங் தான் பெரிய பலம். இப்படியொரு படம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் போல வசூலை வாரிக் குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆடு ஜீவிதம் – மாஸ்டர் பீஸ்!

ரேட்டிங் – 3.5

google news
Continue Reading

More in latest news

To Top