Connect with us

Cinema News

அய்யோ அது பயங்கரமான படமாச்சே!.. அஞ்சான் படத்தை ரீ ரிலீஸ்ல பார்க்க ரெடியா?.. கங்குவா காலி தான்!..

ஏப்ரல் மாதம் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா, சமந்தா, வித்யூத் ஜமால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்தான் அஞ்சான். ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தை வைத்து தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தான் படங்களில் நடிப்பார்களா நானும் அதே கதையை வைத்து நடிக்கிறேன் என சூர்யா நடித்த படம் தான் அஞ்சான்.

இதையும் படிங்க: பட வாய்ப்புகள் போச்சு!.. அதிரடியா மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த கோமாளிகள்.. அட அவருமா?..

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே சமந்தாவின் துள்ளலான கவர்ச்சி நடனத்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக சூர்யாவின் மாசான லுக், துப்பாக்கி வில்லன் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆனால், அஞ்சான் திரைப்படம் வெளியான பின்னர், அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வரியா என ஆர்ஜே பாலாஜி கலாய்க்கும் அளவுக்கு படம் அட்டு பிளாப் ஆனது.

இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..

அஞ்சான் படத்தின் தோல்விக்கு அதன் நீளம் தான் காரணம் என்றும் ரீ எடிட் செய்யப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக கமலா சினிமாஸ் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லிங்குசாமி கூறியது சூர்யா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஞ்சான் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெறுமா அல்லது கங்குவா படத்துக்கு ஆப்பு வைத்து விடுமா என்கிற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ‘லியோ’வில் செஞ்ச தப்பு! ‘கோட்’ படத்தில் நடக்கவே நடக்காது.. கண்கொத்தி பாம்பாக சுத்தும் ஏஜிஎஸ்

ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் மட்டுமே முதல் ஷோ மட்டுமே ரசிகர்களின் அலப்பறையில் ஓடுவதாகவும் அதன் பின்னர் அடுத்த புது படத்தை தியேட்டர்கள் வெளியிட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், எஸ்எம்எஸ் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே ரீ ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top