துண்டு பிரச்சுரமாக மாறிப்போன ஹரி! ‘ரத்னம்’ படத்திற்கு மட்டும் ஏன் இவ்ளோ மெனக்கிடல்?

by Rohini |
visha
X

visha

Director Hari: தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் திரைப்படங்களை கொடுப்பதில் மிகச்சிறந்த இயக்குனராக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார். சாமி, சிங்கம், பூஜை, தாமிரபரணி போன்ற பல ஆக்சன் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் ஹரி.

இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானவை. திரைப்படங்களை பார்க்கும் பொழுது இவர் எந்த அளவுக்கு கதைகளில் மெனக்கிட்டிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு புரியும். வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் படத்தை கதை களத்தை கொண்டு செல்வதில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார் ஹரி.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரோகிணியை இப்படி கொடுமைப்படுத்தும் விஜயா… மீனா எஸ்கேப் தான்!…

தற்போது விஷாலை வைத்து ரத்னம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் யானை. அந்தப் படத்தை அருண் விஜயை வைத்து எடுத்திருந்தார். யானை திரைப்படமும் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் நாளை ரத்னம் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஹரி மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து படத்தை புரமோட் செய்திருந்த நிலையில் இதுவரை மட்டும் படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர் பிரமோஷனில் கலந்து கொள்ளவில்லை.

இதையும் படிங்க: மூன்று கெட்டப்புகளில் நடித்தும் மூட் அவுட் பண்ணாத 5 நடிகர்கள்!… மூன்று முகத்தில் கலக்கிய ரஜினி!..

ஆனால் அவரிடம் பிரமோஷனுக்காக இரண்டு வாரம் கால்ஷீட் கேட்டதாகவும் ஹரியிடம் இருந்து பிரியா பவானி சங்கருக்கு இதுவரை எந்த ஒரு அழைப்பிதழும் போகவில்லை என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன. அது மட்டும் இல்லாமல் படத்தின் போஸ்டரிலும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகைக்கும் ஹரிக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதோ என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை ரிலீஸ் என்பதால் ஹரி இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ரத்னம் திரைப்படத்திற்காக மிகவும் இறங்கி வேலை பார்த்து வருகிறார். அதாவது ஜவுளிக்கடை, பாத்திர கடை என தெருவோரங்களில் இருக்கும் கடைகளுக்கெல்லாம் சென்று ரத்தம் திரைப்படத்தை பார்க்கச் சொல்லி ப்ரமோஷன் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: மூன்று கெட்டப்புகளில் நடித்தும் மூட் அவுட் பண்ணாத 5 நடிகர்கள்!… மூன்று முகத்தில் கலக்கிய ரஜினி!..

சாலையோரம் அமர்ந்திருக்கும் முதியோர்களை சந்தித்தும் ரத்னம் திரைப்படத்தை பற்றி எடுத்துரைத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த படத்திற்கு மட்டும் இந்த அளவு ஹரி மெனக்கிடுகிறார் என கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த ஒரு இயக்குனரும் இது போல் ஒரு பிரமோஷன் செய்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

Next Story