அஜித்தை வச்சு அந்த மாதிரி படமா? ஒரு வேளை ஏகே 64 இருக்குமோ.. இயக்குனர் சொன்ன அப்டேட்

by Rohini |   ( Updated:2024-03-27 16:08:40  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். துணிவு படத்திற்கு பிறகு வேறெந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்த நிலையில் எப்படியாவது தன் படத்தை ரிலீஸ் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறார் அஜித். ஆனால் விடாமுயற்சி படத்தில் சில பல சிக்கல்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் லைக்காவிற்கு இருக்கும் பொருளாதார நெருக்கடி மறுபக்கம் அஜித்திற்கு மகிழ் திருமேனிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன. இதை இன்னும் பெரிது படுத்தும் விதமாக திடீரென அஜித்தின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்டு விடாமுயற்சி படத்தை அப்படியே ஆஃப் செய்து விட்டார்கள்.

இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..

அதுவும் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகும் குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டது. அதனால் விடாமுயற்சி படத்தின் நிலைமை என்னவாகும் என தெரியவில்லை. இதற்கிடையில் அஜித்தை பற்றிய இயக்குனர் ஹரியின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது அமர்க்களம் படத்தில் ஹரி உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம். அப்போது அஜித் எந்த ப்ராஜக்ட் ஆனாலும் அதில் உண்மையாக இருப்பாராம். அவரால் எந்த பிரச்சினையும் வராது எனவும் அவரை பார்த்தாலே கூப்பிட்டு பேச தோன்றும் எனவும் ஹரி கூறினார்.

இதையும் படிங்க: ‘லியோ’வில் செஞ்ச தப்பு! ‘கோட்’ படத்தில் நடக்கவே நடக்காது.. கண்கொத்தி பாம்பாக சுத்தும் ஏஜிஎஸ்

அந்தளவுக்கு மிகவும் சகஜமான மனிதர் அஜித் என ஹரி கூறியிருக்கிறார். மேலும் அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாகத்தான் எடுக்க வேண்டும். ஒரு ராபின்ஹூட் படம் மாதிரி அஜித்தை வைத்து எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பேசாமல் முதலிலேயே ஹரியை வைத்து அஜித் படத்தை எடுத்திருக்கலாம் என கூறிவருகிறார்கள்.

Next Story