வாய்ப்பு கொடுத்தும் அசிங்கப்படுத்தப்பட்ட ரஜினி… நிலைகுலைய வைத்த அந்த இயக்குனர்…

Rajinikanth: நடிக்க ஆசைப்பட்டு சினிமா கல்லூரியில் வந்து படித்து முடித்த ரஜினிகாந்த் பின்னர் வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கினார். அங்கு அவருக்கு கிடைத்த கஷ்டங்கள் ஏராளம். ஆனால் ஒரு இயக்குனர் வாய்ப்பு கொடுத்தும் கேவலப்படுத்தினாராம்.

நடிப்புக்காக படித்து முடித்த ரஜினிகாந்த் எல்லாரிடமும் வாய்ப்புக்காக போய் நின்றார். ஆனால் அப்போது அவருக்கு அதிகம் கிடைத்தது நிராகரிப்பு தான். காரணம் அவரின் கலர். அந்த காலத்தில் வெள்ளையாக இருப்பவர்கள் தான் ஹீரோ என்ற எண்ணம் இருக்கும். அதை உடைக்க முதல் ஆளாக வந்தவர் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! இந்த ஒரு காரணத்துக்காக அந்தப் படத்தில் நடிக்க தயங்கிய தனுஷ்.. இத நம்பனுமா

சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே ரஜினிகாந்துக்கு கிடைத்தது. அவரின் உண்மையான திறமையை புரிந்துக்கொண்டு வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் பாலசந்தர் தான். அங்கு தொடங்கிய பயணம் தான் இன்று கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக மாற்றி இருக்கிறது. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் அவருக்கு இருந்த போராட்டங்கள் ஏராளம்.

தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்க அதே சமயம் கன்னடாவிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்ததாம். அப்போது மூன்று முடிச்சு படம் முடிந்து ஒரு கன்னட படத்தில் நடிக்க பெங்களூர் செல்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அவர் செல்லும் முன்னரே படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்ததாம்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

இதை பார்த்து ஷாக்கானவர் நேராக இயக்குனரை சென்று பார்க்க அவர் என்னப்பா உன்னை தான் இந்த படத்தில் இருந்து நீக்கிட்டோமே? நடிகைக்கு உன்னுடன் நடிக்க விருப்பம் இல்லையாம் என அடித்து விட்டு இருக்கிறார். இதில் ரஜினிகாந்த் உடைந்து போனாராம். உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலை தற்செயலாக ரஜினியின் வீட்டிற்கு வந்த அப்படத்தின் தயாரிப்பாளர், ரஜினியை சுற்றிலும் சிகரெட்டாக கிடக்க, என்ன ஆச்சு எனக் கேட்டாராம்.

தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கவலையுடன் ரஜினி சொல்ல தயாரிப்பாளரே சிரித்து விட்டாராம். உன்னை கேலி செய்யவே இயக்குனர் அப்படி சொல்லி இருக்கிறார். அங்கு நடந்ததை நீ போன பின்னர் செட்டில் இருந்தவர்களிடம் சொல்லி சிரித்து வந்தார். நீ அதைப் போய் நிஜமென நம்பி இப்படி உட்கார்ந்திருக்க என்ற போது ரஜினிக்கு அதிர்ச்சி ஆகிவிட்டதாம். புதுமுக நடிகர் என்றால் இப்படியெல்லாமா கேவலப்படுத்துவார்கள் எனக் கடிந்துக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!..

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

42 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago