ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!..

 
ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!..
தமிழ் சினிமாவில் 2007ம் வருடம் வெளியான கல்லூரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தமன்னா. அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கி இரண்டு மொழி படங்களிலும் ஒரு இடத்தை பிடித்து தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக பேன் இண்டியா படங்களில் நடிக்க துவங்கி விட்டார். மேலும், பாலிவுட் படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிரவைத்து வருகிறார். ஒருபக்கம், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அவர் சென்றிருந்தபோது ரசிகர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதையும் படிங்க: இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! இந்த ஒரு காரணத்துக்காக அந்தப் படத்தில் நடிக்க தயங்கிய தனுஷ்.. இத நம்பனுமா அந்த அளவுக்கு நேஷனல் கிரஸாக மாறியிருக்கிறார் தமன்னா. தமிழில் கமலை தவிர எல்லா நடிகர்களுடனும் நடித்துவிட்டார். நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!.. இடுப்பை குலுக்கி குலுக்கி அவர் ஆடிய அந்த நடனமே படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்து அந்த படத்தின் வெற்றிக்கே அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த படம் வெளியான பின் நிகழ்ச்சிகளில் இந்த பாடலுக்கு நடனமாடவே ஒரு கோடி வரை வாங்கினார் தமன்னா. மேலும் பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கினார். இதையும் படிங்க: படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி… இந்நிலையில், இதுவரை ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்த தமன்னா தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டாராம். அதுக்கு அவர் சொல்லும் காரணம்தான் ஹைலைட். ஜெயிலர் பட ஹிட் அடிச்சதுக்கு காரணமே நான்தான். எனக்கு இப்போ பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு’ என சொல்கிறாராம். இதைக்கேட்டு தலை தெறிக்க ஓடுகிறார்களாம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள். சமீபத்தில் கேரளாவில் காவாலா பாடலுக்கு யானை ஒன்று நடனமாடிய வீடியோ சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ தமன்னா கண்ணில் பட்டால் சம்பளமாக அவர் 10 கோடி கேட்டாலும் கேட்பார் என சிரிக்கிறது தமிழ் சினிமா உலகம்.

From Around the web