Director kathir: 90களில் காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை உருக வைத்தவர் கதிர். முரளி, ஹீரா வைத்து இவர் முதலில் இயக்கிய திரைப்படம் இதயம். படத்தின் தலைப்பு இதயம் என்பதாலோ என்னவோ பலரின் இதயங்களை இப்படம் பாதித்தது. பலரையும் நிலைகுலைய வைத்தது.
ஏனெனில் ஒருதலை காதலால் ஒரு மருத்துவ மாணவரின் இதயம் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை மிகவும் ஆழமாக கதிர் காட்டியிருந்தார். இந்த படத்திற்கு பின்னர்தான் ஒரு தலைக்காதலில் உருகுபவர்களை இதயம் முரளி என கிண்டலாக அழைக்க துவங்கினார்கள்.
இதையும் படிங்க: எனக்கு மட்டும் ஏன் அப்படி பண்ண?.. நெல்சனுக்கு போன் போட்டு மீண்டும் திட்டிய விஜய்.. என்ன ஆச்சு?
அதன்பின் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். எல்லா திரைப்படங்களிலும் கதாநாயகியை பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வார். ஒரு தலைக்காதலாகவே செல்லும் அந்த காதல் கை கூடாமல் ஹீரோ என்னென்ன வலிகளை சந்திக்கிறார் என்பதுதான் திரைக்கதையாக இருக்கும்.
அதேபோல், இவரின் படமென்றால் ஹீரோ ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக்கொண்டு காதல் நிறைந்த கண்களுடன் காதலியை பார்ப்பார். 80 கிட்ஸ்கள் அதில் உருகிப்போவார்கள். அதேபோல், இவர் இயக்கும் படங்களில் பாடல் காட்சிகளை சிறப்பாக எடுப்பார். பாடல்களை பிரம்மாண்டமாக எடுப்பதில் இவர் ஷங்கருகு முன்னோடி என்றே சொல்லலாம். இவர் கடைசியாக இயக்கிய ‘காதல் வைரஸ்’ திரைப்படம் ஃபிளாப் ஆகிப்போனது. இந்த திரைப்படம் 2002ம் வருடம் வெளியானது. அதன்பின் கதிர் தமிழ் படத்தை இயக்கவே இல்லை.
இதையும் படிங்க: தலைவர் 170 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஸ்டார்!. அப்ப கண்டிப்பா இது பேன் இந்தியா படம்தான்!..
இப்போது 20 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய படத்தை கதிர் இயக்கவுள்ளார். இந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடிக்கவும் உள்ளாராம். இதில் அதிர்ச்சி என்னவெனில் இதில் லவ்டுடே படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கும் இவனா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்திற்கு கதிரின் நெருங்கிய நண்பர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் கதிருக்கு 55 வயதுக்கு மேல் ஆகிறது. அவருக்கு ஜோடியாக எப்படி இவானா நடிப்பார் என்பதுதான் தெரியவில்லை.
இதையும் படிங்க: தளதள உடம்ப காட்டும் தக்காளி பழம்!.. தாறுமாறா காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…